என் மலர்
பைக்
ரூ.80,000 துவக்க விலையில் புது ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த ஓலா எலெக்ட்ரிக்
- புதிய ஓலா S1X வெள்ளை, நீலம், சிவப்பு, வெள்ளி மற்றும் கருப்பு என ஐந்து வண்ணங்களில் விற்பனையாகிறது.
- இந்த ஸ்கூட்டரில் இப்போது வயர் டெக் மூலம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
பைக் பிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் அதன் ஜென் 3 ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இது தற்போதைய மாடல்களை விட அதிக அம்சங்கள் கொண்டது, மேம்பட்டது மற்றும் இலகுவான மாடலில் இன்று முதல் விற்பனையாகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள அனைத்தும் புதியவை என்று நிறுவனம் கூறுகிறது. சேசிஸ் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவானது. மோட்டாரில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் பேட்டரி செல்கள் புதியவை. இந்த ஸ்கூட்டரில் இப்போது வயர் டெக் மூலம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய ஓலா S1X மூன்று பேட்டரி விருப்பங்களில் கிடைக்கும். 2kWh (ரூ. 80,000), 3kWh (ரூ. 90,000) மற்றும் 4kWh (ரூ. 1 லட்சம்). இதன் 4kWh பேட்டரி அதிகபட்சமாக மணிக்கு 123 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 242 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3kWh பேட்டரி 176 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இது அதிகபட்சம் 113 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 2kWh அதிகபட்ச வேகம் 101 கிலோமீட்டர்கள் ஆகும். இது 108 கிலோமீட்டர் வரை செல்லும்.
புதிய ஓலா S1X வெள்ளை, நீலம், சிவப்பு, வெள்ளி மற்றும் கருப்பு என ஐந்து வண்ணங்களில் விற்பனையாகிறது. இந்த ஸ்கூட்டர்கள் 3 ஆண்டுகள்/40,000 கிலோமீட்டர்கள் உத்தரவாதத்துடன் வருகின்றன. ஆனால் கூடுதலாக ரூ.14,999 செலுத்துவதன் மூலம் பேட்டரி உத்தரவாதத்தை 8 ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கிலோமீட்டர்களாக நீட்டிக்கலாம்.