search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விலை குறைப்பு இப்படி இருக்கனும்.. எவ்வளவு தெரியுமா?
    X

    விலை குறைப்பு இப்படி இருக்கனும்.. எவ்வளவு தெரியுமா?

    • கியூ.ஜெ. பைக்குகளுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிப்பு.
    • அதிகபட்ச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கியூ.ஜெ. மோட்டார் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை இந்தியாவில் குறைத்து இருக்கிறது. அதன்படி கியூ.ஜெ. மாடல்கள் விலை ரூ. 40 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.

    விலை குறைப்பை தொடர்ந்து கியூ.ஜெ. SRC 500 மற்றும் SRV 300 மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 40 ஆயிரம் குறைவு ஆகும்.

    கியூ.ஜெ. SRC 250 விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 31 ஆயிரம் குறைவு ஆகும். இந்த விலை குறைப்பு ஜனவரி 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. விலை குறைப்பின் மூலம் கியூ.ஜெ. மாடல்களின் விற்பனை அதிகரிக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


    கியூ.ஜெ. SRC 250 மாடலில் ரெட்ரோ டிசைன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வட்ட வடிவ லைட்கள் மற்றும் கண்ணாடிகள் உள்ளன. இத்துடன் டியர் டிராப் ஃபியூவல் டேன்க், வயர் ஸ்போக் வீல் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 249சிசி, இன் லைன் டுவின் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 17.1 ஹெச்.பி. பவர், 17 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. கியூ.ஜெ. SRC 500 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது.

    Next Story
    ×