search icon
என் மலர்tooltip icon

    பைக்

    வேற லெவல் மாற்றங்களுடன் அறிமுகமான முற்றிலும் புதிய புல்லட் 350
    X

    வேற லெவல் மாற்றங்களுடன் அறிமுகமான முற்றிலும் புதிய புல்லட் 350

    • ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மாடல் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய புல்லட் 350 மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 புதிய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாடலின் டிசைன் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது.

    இதோடு முன்புறத்தில் சற்றே நீளமான ஃபெண்டர், டேன்க் வடிவம் சற்று மாற்றப்பட்டு இருக்கிறது. இவைதவிர இந்த மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், க்ரோம் நிறத்தால் ஆன பாகங்கள் மற்றும் பழையபடி பாரம்பரியம் மிக்க டிசைன் உள்ளது.

    புதிய புல்லட் 350 மாடலிலும் கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் மீடியோர் 350 மாடல்களில் உள்ளதை போன்றே 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

    இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு இரண்டு புறமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இதன் பேஸ் வேரியண்டில் மட்டும் பின்புறத்தில் டிரம் பிரேக், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இதன் விலை ஹண்டர் 350 மற்றும் கிளாசிக் 350 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் செப்டம்பர் 3-ம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×