search icon
என் மலர்tooltip icon

    பைக்

    வேறலெவல் அம்சங்கள், ஸ்டிரீட் நேக்கட் லுக்கில் ராயல் என்பீல்டு கெரில்லா அறிமுகம்
    X

    வேறலெவல் அம்சங்கள், ஸ்டிரீட் நேக்கட் லுக்கில் ராயல் என்பீல்டு கெரில்லா அறிமுகம்

    • ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது.
    • புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை எக்ஸ் ஷோரூமில் ரூ.2.39 லட்சத்தில் தொடங்குகிறது.

    தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 இன் வடிவமைப்பு அதிநவீன ரெட்ரோ டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட டியர்டிராப் வடிவ பெட்ரோல் டேங்க் உள்ளது. இத்துடன் மெலிதான டெயில் பகுதி பெற்றுள்ளது.

    சிங்கிள் பீஸ் இருக்கை மற்றும் பில்லியனுக்கு ட்யூபுலர் கிராப் ஹேண்டில் உள்ளது. மொத்தத்தில் கெரில்லா 450 அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த பைக்: ஃப்ளாஷ், டாஷ் மற்றும் அனலாக் ஆகிய மூன்றுவகை வண்ணங்களாக பிரிக்கப்படுகின்றன.

    ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது. டாஷ் வேரியண்ட் கோல்ட் டிப் மற்றும் பிளேயா பிளாக் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதே நேரத்தில் அனலாக் கீழ் ஸ்மோக் மற்றும் பிளேயா பிளாக் கொண்டுள்ளது.


    இந்த பைக்கில் 452சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 8,000ஆர்பிஎம்மில் 39.50 ஹெச்பியையும், 5,500ஆர்பிஎம்மில் 40 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    பிரேக்கிங் வேலைகளை இரட்டை பிஸ்டன் காலிபருடன் முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் கவனித்துக்கொள்கிறது. பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் 270 மிமீ டிஸ்க் உள்ளது. இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

    கெரில்லா 450 ஆனது 1440 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது, அதே சமயம் கிரவுண்ட் கிளியரன்ஸ் 169 மிமீ ஆகும். இதன் எடை 185 கிலோ ஆகும்.

    அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் எல்இடி விளக்குகள் உள்ளன. புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்த பைக்கின் அனலாக் வேரியண்ட் விலை ரூ.2.39 லட்சம், மிட்-ஸ்பெக், டாஷ் வேரியன்டின் விலை ரூ.2.49 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் கிடைக்கிறது. ஃப்ளாஷ் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூமில் ரூ.2.54 லட்சத்தில் கிடைக்கும்.

    இந்திய சந்தையில் இந்த பைக் டிரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×