என் மலர்
பைக்
ரூ. 3.5 லட்சத்தில் அறிமுகமான புதிய ஷாட்கன் 650 - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
- ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- இந்த பைக் மொத்தத்தில் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் கஸ்டம் ஷெட், கஸ்டம் ப்ரோ மற்றும் கஸ்டம் ஸ்பெஷல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய ஷாட்கன் 650 மாடலின் பேஸ் வேரியன்ட் ஷீட்மெட்டல் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். மிட் ரேன்ஜ் கஸ்டம் ப்ரோ வேரியண்ட் கிரீன் ட்ரில் மற்றும் பிளாஸ்மா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
டாப் என்ட் கஸ்டம் ஸ்பெஷல் வேரியன்ட் ஃபிளாக்ஷிப் ஸ்டென்சில் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 73 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஷாட்கன் 650 மாடல் சூப்பர் மீடியோர் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலும் SM650 சேசிஸ்-ஐ தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் ஹேன்டில்பார் மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டென்சில் வைட், பிளாஸ்மா புளூ, கிரீன் ட்ரில் மற்றும் ஷீட்மெட்டல் கிரே என நான்குவிதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஷாட்கன் 650 மாடலில் 648சிசி, பேரலல் டுவின், ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.