என் மலர்
பைக்
அபாச்சி RTR 160 சீரிஸ் பிளாக் எடிஷன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
- 160சிசி-யில் கிடைக்கும் இரு மாடல்களிலும் மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன.
- அபாச்சி RTR 160 2V மாடலில் 159.7சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் RTR 160 மற்றும் RTR 160 4V மாடல்களின் "பிலேஸ் ஆஃப் பிளாக்" டார்க் எடிஷன் வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. புதிய RTR 160 பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் RTR 160 4V பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இரு மாடல்களிலும் ஷைனி பிளாக் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பைக் டேன்க் பகுதியில் டி.வி.எஸ். அபாச்சி ஸ்டேலியன் லோகோ பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் எக்சாஸ்ட் பிளாக்டு அவுட் செய்யப்பட்டு உள்ளது. புதிய நிறம் தவிர இந்த பைக்குகளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
160சிசி-யில் கிடைக்கும் இரு மாடல்களிலும் மூன்று ரைடிங் மோட்கள், டி.வி.எஸ். SmartXonnect சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. அபாச்சி RTR 160 2V மாடலில் 159.7சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சம் 15.82 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
அபாச்சி RTR 160 4V மாடலில் 160சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 17.35 ஹெச்.பி. பவர், 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.