என் மலர்
ஆட்டோமொபைல்
X
இந்திய சந்தையில் அதிக வரவேற்பு பெறும் ஹூண்டாய் வென்யூ மாடல்
Byமாலை மலர்23 May 2020 3:32 PM IST (Updated: 23 May 2020 3:32 PM IST)
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரின் இந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடல் இந்திய சந்தையில் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் நான்கில் மூன்று மாடல்கள் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகளவு டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டு நிலவரப்படி ஹூண்டாய் வென்யூ மாடல் மொத்தம் 93,624 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருக்கிறது. இவற்றில் 58,764 யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும். இவற்றில் 44,073 மாடல்கள் டர்போ பெட்ரோல் வேரியண்ட்கள் ஆகும்.
இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ பெட்ரோல் வேரியண்ட்கள் விலை ரூ. 6.7 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் வென்யூ டர்போ பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் மற்றும் டிசிடி டிரான்ஸ்மிஷன் விலை முறையே ரூ. 8.46 லட்சம் மற்றும் ரூ. 9.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
X