என் மலர்
கார்
கனெக்டெட் அம்சங்கள், லெவல் 2 ADAS வசதிகள் - ரூ. 9 லட்சத்தில் அறிமுகமான எம்.ஜி. ஆஸ்டர்
- எம்.ஜி. ஆஸ்டர் மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- புதிய ஆஸ்டர் மாடலில் ஏராளமான கனெக்டெட் அம்சங்கள் உள்ளன.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடல் - ஆஸ்டர்-ஐ அப்டேட் செய்துள்ளது. புதிய 2024 எம்.ஜி. ஆஸ்டர் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த கார் ஸ்ப்ரின்ட், ஷைன், செலக்ட், ஷார்ப் ப்ரோ மற்றும் சேவி ப்ரோ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய எம்.ஜி. ஆஸ்டர் மாடலில் ஐ-ஸ்மார்ட் 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 80-க்கும் அதிக கனெக்டெட் அம்சங்கள், ஜியோ வழங்கும் குரல் அங்கீகார வசதி (voice recognition system), ஆன்டி தெஃப்ட் வசதி கொண்ட டிஜிட்டல் கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் IRVM, வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி, பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுன்ட் கேமரா, லெவல் 2 ADAS போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஆஸ்டர் மாடலில் மெக்கானிக்கல் ரீதியில் எந்த மாற்றும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த காரிலும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல், CVT மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.