search icon
என் மலர்tooltip icon

    கார்

    ரூ. 89 லட்சம் தான் - பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் இந்தியாவில் அறிமுகம்!
    X

    ரூ. 89 லட்சம் தான் - பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் இந்தியாவில் அறிமுகம்!

    • பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் மாடலில் 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
    • பிஎம்டபிள்யூ Z4 வாங்குவோருக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி அறிவிப்பு.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது Z4 ரோட்ஸ்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் மாடலின் விலை ரூ. 89 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் Z4 சீரிசின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் வெளிப்புறம் டுவீக் செய்யப்பட்ட எக்ஸ்டீரியர் டிசைன், உள்புறம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய பிஎம்டபிள்யூ Z4 மாடலை வாங்குவோருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் வரம்பற்ற கிலோமீட்டர்கள் வாரண்டி கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் 2023 பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் மாடலில் புதிய கிட்னி கிரில், அளவில் பெரிய ஏர் இண்டேக்குகள், சாஃப்ட்-டாப் (மேற்கூரை திறந்து மூடும் வசதி), எல்இடி ஹெட்லேம்ப்-கள், புதிய ஏர் வெண்ட்கள், முன்புறம் வீல் ஆர்ச்கள் உள்ளன.

    இத்துடன் 19 இன்ச் அளவில் M லைட் அலாய் வீல்கள், M ஸ்போர்ட் பிரேக்குகள், கிரில் பகுதியில் செரியம் கிரே ஃபினிஷ், ORVM கேப்கள் மற்றும் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. காரின் உள்புறம் ஆம்பியண்ட் லைட்டிங், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சீட்கள், மெமரி ஃபன்ஷன், லெதர் மற்றும் அல்காண்ட்ரா இண்டீரியர் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ப்ரோஃபஷனல், பிஎம்டபிள்யூ ஒஎஸ் 7.0, கலர்டு ஹெச்யுடி, 408 வாட் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டிரைவ் மோட்கள், அடாப்டிவ் M ஸ்போர்ட் சஸ்பென்ஷன், M ஸ்போர்ட் டிஃபரென்ஷியல் மற்றும் ஏராளமான டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்கள் உள்ளன.

    மேம்பட்ட பிஎம்டபிள்யூ Z4 ரோட்ஸ்டர் மாடலில் 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 340 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும்.

    Next Story
    ×