search icon
என் மலர்tooltip icon

    கார்

    புத்தாண்டு ஸ்பெஷல்- ரூ.1,00,000 தள்ளுபடியுடன் கிடைக்கும் ஹோண்டா கார்
    X

    புத்தாண்டு ஸ்பெஷல்- ரூ.1,00,000 தள்ளுபடியுடன் கிடைக்கும் ஹோண்டா கார்

    • ஹோண்டா கார் மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி.
    • சலுகைகள் ஒவ்வொரு மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    இந்திய சந்தையில் ஹோண்டா கார் விற்பனையாளர்கள் அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவித்துள்ளனர். இவை ரொக்க பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி, எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் ஹோண்டா சிட்டி e:HEV மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இது முழுமையான தள்ளுபடி சலுகை ஆகும். இதுதவிர இந்த மாடலுக்கு வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. சிட்டி e:HEV ஹோண்டா நிறுவனத்தின் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடல் ஆகும். இதில் 1498சிசி, 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ஹோண்டா சிட்டி மாடலை வாங்குவோர் ரூ. 88 ஆயிரத்து 600 வரை சேமிக்க முடியும். இதில் ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 4 ஆயிரம் வரை லாயல்டி போனஸ், ரூ. 6 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 25 ஆயிரம் வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர ஹோண்டா சிட்டி VX மற்றும் ZX மாடல்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 600 மதிப்பிலான நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.


    ஜனவரி மாதம் ஹோண்டா அமேஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 72 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இது தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் பொருந்தும். இந்த காரின் S வேரியண்ட்-க்கு ரூ. 45 ஆயிரம் வரை ரொக்க தள்ளுபடி, ரூ. 4 ஆயிரம் வரை லாயல்டி பலன்கள், ரூ. 23 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஹோண்டா அமேஸ் E மற்றும் VX வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 52 ஆயிரம் மற்றும் ரூ. 62 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகள் மற்றும் பலன்கள் ஸ்டாக் இருப்பு மற்றும் ஒவ்வொரு விற்பனையாளரை பொருத்து வேறுப்படும்.

    Next Story
    ×