என் மலர்
கார்
கிரெட்டா N லைன் மைலேஜ் பற்றி வெளியான தகவல்
- கிரெட்டா N லைன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா N லைன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் N8 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி.-இல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த கார் லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் லிட்டருக்கு முறையே 18 மற்றும் 18.2 கிலோமீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கின்றன.
கிரெட்டா ஸ்டான்டர்டு வெர்ஷனில் உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் DCT கியர்பாக்ஸ் வெர்ஷன் லிட்டருக்கு 18.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் i20 N லைன் மற்றும் வென்யூ N லைன் மாடல்கள் வரிசையில் கிரெட்டா N லைன் மூன்றாவது N சீரிஸ் மாடலாக இணைந்துள்ளது.