search icon
என் மலர்tooltip icon

    கார்

    உற்பத்தி துவக்கம்.. வெளியீட்டுக்கு தயாரான ஹூண்டாய் எக்ஸ்டர்
    X

    உற்பத்தி துவக்கம்.. வெளியீட்டுக்கு தயாரான ஹூண்டாய் எக்ஸ்டர்

    • புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் எஸ்யுவி தோற்றம் கொண்டிருக்கிறது.
    • ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் வழங்கப்பட இருக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி- எக்ஸ்டர் மாடலின் உற்பத்தியை துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் ஜூலை 10-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.

    புதிய எக்ஸ்டர் உற்பத்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிப்புறம் எஸ்யுவி போன்ற தோற்றம் கொண்டிருக்கும் வகையில் எக்ஸ்டர் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் உயரமாக காட்சியளிக்கிறது. இத்துடன் ரூஃப் ரெயில்கள் மற்றும் சதுரங்க வீல் ஆர்ச்கள் மற்றும் பிளாஸ்டிக் கிலாடிங் காருக்கு ரக்கட் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் உள்ளன. இந்த கார் ஆறு மோனோடோன் மற்றும் மூன்று டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது பெட்ரோல் மற்றும் CNG வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×