என் மலர்
கார்

கார் மாடலின் விலையை திடீரென உயர்த்திய ஹூண்டாய்

- ஹூண்டாய் பிராண்டின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் குறிப்பிட்ட மாடல்கள் விலை முன்பை விட அதிகரித்துள்ளது.
- வாடிக்கையாளர்கள் ஏழு வண்ணங்கள் மற்றும் இரண்டு வேரியண்ட்களில் தேர்வு செய்யும் வசதி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அதன் தயாரிப்பில் வெளிவந்துள்ள பல மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது i20 N லைன் இணைந்துள்ளது. ஹூண்டாய் பிராண்டின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் குறிப்பிட்ட மாடல்கள் விலை முன்பை விட அதிகரித்துள்ளது.
i20 N லைன் காரின் விலை குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ. 4,000 அதிகரித்துள்ளது. என்ட்ரி லெவல் N6 MT மற்றும் N6 MT டூயல்-டோன் வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ.4,000 அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் i20 N லைனின் விலை இப்போது ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.56 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் கொண்ட 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஏழு வண்ணங்கள் மற்றும் இரண்டு வேரியண்ட்களில் தேர்வு செய்யும் வசதி உள்ளது.