என் மலர்
கார்
முதல் முறையாக சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும் எக்ஸ்டர்
- எக்ஸ்டர் மாடலுக்கு முதல் முறை சலுகைகள் வழங்கப்படுகிறது.
- பிரீமியம் ஹேச்பேக் மாடல் i20 மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஹூண்டாய் i20, கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ மாடல்கள் மட்டுமின்றி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் மாடலுக்கும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனம் தனது எக்ஸ்டர் மாடலுக்கு முதல் முறை சலுகைகளை வழங்குகிறது.
வெர்னா, கிரெட்டா, அல்கசார் மற்றும் டக்சன் மாடல்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த சலுகைகள் ஒவ்வொரு மாநிலம், ஸ்டாக் இருப்பு மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுப்படும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் எக்ஸ்டர் மாடல் 8 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தத்தில் 17 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 13 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த கார் 83 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 69 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் சி.என்.ஜி. ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. எனினும், இது மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் அடங்கும். கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் i20 மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடலான i20 மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7.04 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12.52 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.