என் மலர்
கார்
வெர்னா காரை ரீ-கால் செய்யும் ஹூண்டாய் - என்ன காரணம் தெரியுமா?
- ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா செடான் மாடலின் தேர்வு செய்யப்பட்ட iVT மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்பட வேண்டிய கார்களை பயன்படுத்துவோரை ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
காரில் உள்ள எலெக்ட்ரிக் ஆயில் பம்ப் கண்ட்ரோலரில் பிரச்சினை ஏற்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் ஆகும். பிரச்சினை சரி செய்வதற்காக அருகாமையில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும்.
பாதிக்கப்பட்ட வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும். முன்னதாக கியா நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி.-யை இதே பிரச்சினையை சரி செய்வதற்காக 4 ஆயிரத்து 300 யூனிட்களை ரிகால் செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஹூண்டாய் தனது முற்றிலும் புதிய வெர்னா மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் EX, S, SX மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.