search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஏகப்பட்ட மாற்றங்களுடன் ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்..!
    X

    ஏகப்பட்ட மாற்றங்களுடன் ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்..!

    • இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • வென்யூ நைட் எடிஷன் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ நைட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வென்யூ நைட் எடிஷன் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் S(O) மற்றும் SX(O) வேரியண்ட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய வென்யூ நைட் எடிஷன் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை வென்யூ ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிளாக் நிற முன்புற கிரில் உள்ளது. இத்துடன் ஹூண்டாய் லோகோ இடம்பெற்று இருக்கிறது. கருப்பு நிறத்தால் ஆன ரூஃப் ரெயில்கள், பிராஸ் இன்சர்ட்கள், பிளாக் அலாய் வீல்கள், பாடி நிறத்தால் ஆன டோர் ஹேன்டில்கள், நைட் பேட்ஜ் உள்ளது.

    காரின் உள்புறம் பிளாக் இன்டீரியர், பிராஸ் இன்சர்ட்கள், டூயல் கேமரா கொண்ட டேஷ்கேம், ஸ்போர்ட் மெட்டல் பேட்கள், 3D ஃபுளோர் மேட்கள், பிளாக் நிறத்தால் ஆன இருக்கை மேற்கவர்கள் மற்றும் பிராஸ் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் மாடல் மோனோடோன் மற்றும் டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் மோனோடோன் ஆப்ஷன் அபிஸ் பிளாக், அட்லஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே மற்றும் ஃபியெரி ரெட் நிறங்களிலும், டூயல் டோன் ஆப்ஷனில் ஃபியெரி ரெட் மற்றும் அபிஸ் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது.

    ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×