search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஜூன் 2023 - இந்திய விற்பனையில் டாப் 5 எஸ்யுவி-க்கள்!
    X

    ஜூன் 2023 - இந்திய விற்பனையில் டாப் 5 எஸ்யுவி-க்கள்!

    • ஹூண்டாய் வென்யூ மாடல் வருடாந்திர அடிப்படையில் 12.4 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
    • மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் மாடலாக டாடா பன்ச் இருக்கிறது.

    இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு திடீரென அதிகரித்து விட்டது. இதனை எதிர்கொள்ள அனைத்து கார் உற்பத்தியாளர்களும் புதிய எஸ்யுவி மாடல்களை உருவாக்கும் பணிகளை வேகப்படுத்தி இருக்கின்றன.

    இந்திய சந்தையில் தொடர்ச்சியாக புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையிலும், எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு, அவற்றின் விற்பனையில் வெளிப்படையாக பிரதிபலிக்கிறது. அந்த வகையில், இந்திய சந்தையில் கடந்த ஜூன் மாதம் விற்பனையான கார்களில் டாப் 5 எஸ்யுவி மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூண்டாய் கிரெட்டா:

    இந்திய காம்பேக்ட் எஸ்யுவி மாடல்கள் பிரிவில் பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையிலும், ஹூண்டாய் கிரெட்டா மாடல் எஸ்யுவி-க்கள் பிரிவில் தொடர்ந்து பிரபலமாக விளங்கி வருகிறது. 2023 ஜூன் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்து 447 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    டாடா நெக்சான்:

    டாடா நெக்சான் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யுவி-யாக இருக்கிறது. இந்த மாடல் ஜூன் 2023 மாதத்தில் மட்டும் 13 ஆயிரத்து 827 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 3.2 சதவீதம் குறைவு ஆகும்.

    ஹூண்டாய் வென்யூ:

    ஹூண்டாய் வென்யூ மாடல் வருடாந்திர அடிப்படையில் 12.4 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 2023 ஜூன் மாதத்தில் மட்டும் இந்த கார் 11 ஆயிரத்து 606 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    டாடா பன்ச்:

    மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் மாடலாக டாடா பன்ச் இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் டாடா பன்ச் மாடல் 10 ஆயிரத்து 990 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 5.5 சதவீதம் அதிகம் ஆகும்.

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா:

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இந்த மாடல் கடந்த மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 578 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் பிரெஸ்ஸா எஸ்யுவி மாடல் வருடாந்திர அடிப்படையில் 140 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    Next Story
    ×