என் மலர்
கார்
இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய கியா செல்டோஸ்
- கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 55 சதவீத பங்கு வகிக்கிறது.
- உலகம் முழுக்க 100-க்கும் அதிக நாடுகளுக்கு செலஸ்டோஸ் எஸ்யுவி மாடல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய விற்பனையில் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. விற்பனைக்கு வந்த 46 மாதங்களில் இந்த மைல்கல் சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில், கியா செல்டோஸ் எஸ்யுவி-யின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி வியாபாரத்திலும் செல்டோஸ் மாடல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 55 சதவீத பங்குகளை பிடித்து அசத்தி இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி யூனிட்களும் அடங்கும்.
இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகள் என்று உலகம் முழுக்க 100-க்கும் அதிக நாடுகளுக்கு செலஸ்டோஸ் எஸ்யுவி மாடல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கியா செல்டோஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த கார் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.