என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கார்
![கார் மாடல் விலையை திடீரென மாற்றும் மஹிந்திரா கார் மாடல் விலையை திடீரென மாற்றும் மஹிந்திரா](https://media.maalaimalar.com/h-upload/2023/09/26/1956619-mahindra-bolero-neo.webp)
கார் மாடல் விலையை திடீரென மாற்றும் மஹிந்திரா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகி வரும் பொலிரோ நியோ மாடல் விலையை மாற்றுகிறது. நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலின் விலை தற்போது ரூ. 1,505 வரை அதிகரித்து இருக்கிறது.
புதிய விலை விவரம்:
மஹிந்திரா பொலிரோ நியோ N4 ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்து 300
மஹிந்திரா பொலிரோ நியோ N8 ரூ. 10 லட்சத்து 16 ஆயிரத்து 500
மஹிந்திரா பொலிரோ நியோ N10 ரூ. 11 லட்சத்து 37 ஆயிரத்து 499
மஹிந்திரா பொலிரோ நியோ N10 (O) ரூ. 12 லட்சத்து 15 ஆயிரத்து 499
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் பி.எஸ். 6-2 விதிகளுக்கு பொருந்தும் வகையிலான டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.