search icon
என் மலர்tooltip icon

    கார்

    45 லட்சம் யூனிட்கள்.. விற்பனையில் தொடர்ந்து அசத்தும் மாருதி ஆல்டோ..!
    X

    45 லட்சம் யூனிட்கள்.. விற்பனையில் தொடர்ந்து அசத்தும் மாருதி ஆல்டோ..!

    • மாருதி சுசுகி ஆல்டோ மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    • மாருதி ஆல்டோ மாடல் கடந்த எட்டே ஆண்டுகளில் 15 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் இந்திய விற்பனையில் 45 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்திய சந்தையில் 2000-வது ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி ஆல்டோ மாடல் அந்நிறுவனத்தின் நீண்ட காலம் விற்பனையில் உள்ள மாடல் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாக மாருதி சுசுகி ஆல்டோ மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த மாடல் பெட்ரோல் மற்றும் CNG என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் புதிய மாருதி சுசுகி ஆல்டோ மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    2000-வது ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி ஆல்டோ மாடல் 2016-ம் ஆண்டு வாக்கில் விற்பனையில் 30 லட்சம் யூனிட்களை கடந்தது. அதன் பிறகு எட்டே ஆண்டுகளில் இந்த கார் 15 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த காரில் முதல் தலைமுறை ஆல்டோ K10 மாடல் 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆல்டோ K10 மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த காரின் VXi வேரியன்டில் CNG கிட் பொருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 5 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    Next Story
    ×