என் மலர்
கார்
2023-இல் அதிகம் விற்பனையான எஸ்.யு.வி. - எது தெரியுமா?
- கடந்த ஆண்டு மட்டும் மாருதி சுசுகி 17 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது.
- மாருதி எஸ்.யு.வி. மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி பிரெஸ்ஸா இருந்து வருகிறது. இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. என்பதை கடந்து 2023 ஆண்டு நாட்டில் அதிகம் விற்பனையான எஸ்.யு.வி. என்ற பெருமையை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 17.7 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மட்டும் 1.70 லட்சம் யூனிட்கள் ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் விலை ரூ. 8 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.