என் மலர்
கார்

விரைவில் இந்தியா வரும் மாருதி சுசுகி ஜிம்னி

- முந்தைய திட்டப்படி இந்த காரின் வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெற இருந்தது.
- மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய K15C யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜிம்னி மாடலின் விலை விவரங்கள் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்த எஸ்யுவி மாடலின் சர்வதேச அறிமுகம் நடைபெற்றது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஜிம்னி மாடலின் விற்பனை நெக்சா விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
முந்தைய திட்டப்படி இந்த காரின் வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெற இருந்தது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி முற்றிலும் புதிய ஜிம்னி மாடல் வெளியீடு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. புதிய ஜிம்னி மாடலை வாங்க இதுவரை 24 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
தற்போதைய தகவல்களின் படி இந்த காரின் மேனுவல் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் ஆறு மாதங்களாகவும், ஆட்டோமேடிக் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் எட்டு மாதங்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. முற்றிலும் புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடல் புளூயிஷ் பிளாக், கைனடிக் எல்லோ மற்றும் பியல் ஆர்க்டிக் வைட் என்று மூன்று நிறங்களில் கிடைக்கும்.
மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய K15C யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஆஃப் ரோடர் என்பதால் இந்த காரில் 4WD சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.