search icon
என் மலர்tooltip icon

    கார்

    எஸ்யூவி விற்பனை சூப்பர்.. 1.8 லட்சம் கார்களை விற்று அசத்திய மாருதி சுசுகி
    X

    எஸ்யூவி விற்பனை சூப்பர்.. 1.8 லட்சம் கார்களை விற்று அசத்திய மாருதி சுசுகி

    • சியாஸ் நடுத்தர அளவிலான செடான் ஜூன் 2024 இல் 572 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
    • கிராண்ட் விட்டாராவின் ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் மற்றும் eVX கான்செப்ட் அடிப்படையில் ஒரு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் மாடல்களின் விலை பெரும்பாலும் குறைவாக இருப்பதாலேயே நடுத்தர மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இதனாலேயே ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி அதன் விற்பனையை 1.8 லட்சத்தை எட்டியுள்ளது. SUV மாடல்களும் தொடர்ந்து அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஜூன் 2024-ல் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL ) ஒட்டுமொத்த விற்பனை 228,79 ஆகப் பதிவு செய்துள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 1,39,918 யூனிட்கள், டொயோட்டாவிற்கு 8,277 யூனிட்கள் வழங்கப்பட்டன. 31,033 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய மினி பிரிவில், MSIL 9,395 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது ஜூன் 2023 இல் விற்கப்பட்ட 14,054 யூனிட்களில் இருந்து சரிவை காட்டுகிறது. இது ஆண்டுக்கு ஆண்டு 33.15 சதவீதம் குறைந்ததைக் குறிப்பிட்டுள்ளது.

    பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் போன்ற மாடல்களை உள்ளடக்கிய மாருதி சுசுகி ஜூன் 2024 இல் 64,049 யூனிட்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 0.65 சதவீதம் குறைவு ஆகும்.

    சியாஸ் நடுத்தர அளவிலான செடான் ஜூன் 2024 இல் 572 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1,744 யூனிட்களாக இருந்தது. இதன் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு 67.20 சதவீதம் சரிவு ஏற்பட்டது.


    காம்பாக்ட் மற்றும் மிட்சைஸ் மாடல்களில் எண்ணிக்கை குறைந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, யுடிலிட்டி வாகனப் பிரிவில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி மற்றும் XL6 ஆகியவற்றின் மொத்த விற்பனை ஜூன் 2024 இல் 52,373 யூனிட்டுகளாக இருந்தது.

    இதுவே கடந்த ஜூன் 2023 இல் 43,404 யூனிட்களாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 20.66 சதவீத அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் சமீபத்திய மாடல்கள் விற்பனையில் அதிக அளவில் உள்ளதால், இப்போது புதிய தலைமுறை டிசைரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

    கிராண்ட் விட்டாராவின் ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் மற்றும் eVX கான்செப்ட் அடிப்படையில் ஒரு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. வரவிருக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி, கான்செப்ட் போலவே, ஒருமுறை சார்ஜ் செய்தால் 550 கிமீ தூரம் ஓட்டும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×