search icon
என் மலர்tooltip icon

    கார்

    மாத இறுதியில் கார்களை அப்டேட் செய்யும் மெர்சிடிஸ் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    மாத இறுதியில் கார்களை அப்டேட் செய்யும் மெர்சிடிஸ் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • கார்களின் விலை விவரங்கள் மாத இறுதியில் அறிவிக்கப்படுகிறது.
    • இவை ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் புத்தாண்டை புது கார் வெளியீட்டுடன் கொண்டாட இருக்கிறது. அதன்படி இம்மாத இறுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட GLA மற்றும் AMG GLE 53 கூப் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி இந்த கார்களின் விலை விவரங்களை மெர்சிடிஸ் நிறுவனம் ஜனவரி 31-ம் தேதி அறிவிக்க இருக்கிறது.

    அப்டேட்களை பொருத்தவரை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட GLA மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற கிரில், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், வீல் ஆர்ச்களில் பிளாஸ்டிக் ட்ரிம்கள் வழங்கப்படுகின்றன.


    காரின் உள்புறம் ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் கேமரா, மேம்பட்ட MBUX இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. 2024 GLA மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் AMG GLE 53 கூப் மாடலில் ஸ்லோபிங் ரூஃப்லைன், புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. இந்த காரில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 429 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×