என் மலர்
கார்
எலெக்ட்ரிக் காருக்கு ரூ. 2.30 லட்சம் விலை குறைப்பு.. எம்.ஜி. மோட்டார்ஸ் அதிரடி
- எம்.ஜி. ZS EV மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- எம்.ஜி. ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது ZS EV எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. புதிய விலை மாற்றத்தின் படி எம்.ஜி. ZS EV மாடலின் விலை தற்போது குறைந்துள்ளது. இதனால் எம்.ஜி. ZS EV மாடல் விலை ரூ. 22 லட்சத்து 88 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
எம்.ஜி. ZS EV மாடல்: எக்சைட், எக்ஸ்க்லுசிவ் மற்றும் எக்ஸ்க்லுசிவ் ப்ரோ மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் எக்சைட் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரமும், எக்ஸ்க்லுசிவ் மற்றும் எக்ஸ்க்லுசிவ் ப்ரோ வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
முழுமையான எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற அடிப்படையில், எம்.ஜி. ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், சிங்கில் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 174 ஹெச்.பி. பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 419 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
புதிய விலை விவரங்கள்:
எக்சைட் ரூ. 22 லட்சத்து 88 ஆயிரம்
எக்ஸ்க்லுசிவ் ரூ. 24 லட்சத்து 99 ஆயிரத்து 800
எக்ஸ்க்லுசிவ் ஐகானிக் ஐவரி ரூ. 25 லட்சத்து 09 ஆயிரத்து 800
எக்ஸ்க்லுசிவ் ப்ரோ ரூ. 25 லட்சத்து 89 ஆயிரத்து 800
எக்ஸ்க்லூசிவ் ப்ரோ ஐகானிக் ஐவரி ரூ. 25 லட்சத்து 99 ஆயிரத்து 800
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.