search icon
என் மலர்tooltip icon

    கார்

    எலெக்ட்ரிக் வாகன துறையில் புதிய மைல்கல்.. மாஸ் காட்டும் டாடா மோட்டார்ஸ்..!
    X

    எலெக்ட்ரிக் வாகன துறையில் புதிய மைல்கல்.. மாஸ் காட்டும் டாடா மோட்டார்ஸ்..!

    • டாடா மோட்டார்ஸ்-இன் எலெக்ட்ரிக் வாகன துவக்க விலை ரூ. 8.69 லட்சம் ஆகும்.
    • பயணிகள் வாகனங்களின் அனைத்து பிரிவுகளிலும் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதில் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 50 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் தான் அனைத்து வித பாடி ஸ்டைல்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஹேச்பேக் பிரிவில் (டியாகோ EV), செடான் பிரிவில் (டிகோர் EV) மற்றும் எஸ்.யு.வி. பிரிவில் (நெக்சான் EV) போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் எக்ஸ்பிரஸ் டி, டிகோர் EV மாடலின் வாடகை கார் வெர்ஷனும் விற்பனை செய்து வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரும் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2028 ஆண்டு இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பத்து லட்சம் யூனிட்கள் வரை இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதில் 20 சதவீதம் யூனிட்கள் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×