search icon
என் மலர்tooltip icon

    கார்

    தேதி குறித்த டாடா மோட்டார்ஸ் - வெளியீட்டுக்கு தயாரான பன்ச் EV
    X

    தேதி குறித்த டாடா மோட்டார்ஸ் - வெளியீட்டுக்கு தயாரான பன்ச் EV

    • டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
    • டாடா பன்ச் EV முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் எலெக்ட்ரிக் கார் விவரங்களை கடந்த வாரம் அறிவித்தது. தற்போது இந்த கார் ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய பன்ச் எலெக்ட்ரிக் கார் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜென் 2 EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்படும் முதல் கார் இது ஆகும். இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். டாடா பன்ச் EV மாடலின் முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.


    இந்த கார் எம்பவர்டு ஆக்சைடு டூயல் டோன், சீட்வுட் டூயல் டோன், ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன், டேடோனா கிரே டூயல் டோன் மற்றும் ப்ரிஸ்டைன் வைட் டூயல் டோன் என ஐந்து வித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும்.

    இந்தியாவில் புதிய டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பன்ச்.EV மற்றும் பன்ச்.EV லாங் ரேன்ஜ் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் 3.3 கிலோவாட் பாக்ஸ் சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இதன் லாங் ரேன்ஜ் வெர்ஷனுடன் 7.2 கிலோவாட் ஃபாஸ்ட் ஹோம் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஸ்டான்டர்டு மற்றும் லாங் ரேன்ஜ் வெர்ஷன்களில் முறையே 25 கிலோவாட் ஹவர் மற்றும் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். டாடா பன்ச் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×