என் மலர்
கார்
டாடா பன்ச் iCNG இந்திய விலை இது தான்.. என்னப்பா வாங்கிடலாமா?
- ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா பன்ச் iCNG மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் iCNG விலை விவரங்கள் அறிவிப்பு.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பன்ச் iCNG மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பன்ச் iCNG மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
இந்திய சந்தையில் டாடா பன்ச் iCNG மாடலின் முன்பதிவு கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய பன்ச் iCNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பெட்ரோல் மோடில் இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை டாடா பன்ச் iCNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூப், ஆறு ஏர்பேக், டுவின் சிலிண்டர் CNG டேன்க், CNG மோடில் டைரக்ட் ஸ்டார்ட் வசதி, 7 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.