search icon
என் மலர்tooltip icon

    கார்

    உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டிய டாடா பன்ச்
    X

    உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டிய டாடா பன்ச்

    • இரண்டே ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டியுள்ளது.
    • ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது. டாடா பன்ச் காரின் 3 லட்சமாவது யூனிட் அந்நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டியுள்ளது.

    2021 அக்டோபர் மாதம் டாடா பன்ச் விற்பனை துவங்கிய நிலையில், பத்தே மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. பிறகு 2022 ஜனவரி மாதம் விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்தது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த கார் விற்பனையில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தியது. தற்போது இந்த கார் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.




    நெக்சானை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக டாடா பன்ச் இருக்கிறது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 கார்கள் பட்டியலில் டாடா பன்ச் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. முதலில் இந்த மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு இந்த காரின் CNG வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த காரின் பெட்ரோல் வெர்ஷனில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் CNG வெர்ஷனில் மேனுவல் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த கார் மொத்தத்தில் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×