என் மலர்
ஆட்டோமொபைல்
X
ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்21 April 2020 4:50 PM IST (Updated: 21 April 2020 4:50 PM IST)
மேம்பட்ட புதிய என்ஜினுடன் ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜீப் இந்தியாவில் காம்பஸ் பிஎஸ்6 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 16.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போதைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 89 ஆயிரம் அதிகம் ஆகும்.
பிஎஸ்6 அப்கிரேடுகள் மட்டுமின்றி புதிய காம்பஸ் மாடலில் சில மாற்றங்களை ஜீப் நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது. மேலும் ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் வேரியண்ட் நிறுத்தப்பட்டு, தற்சமயம் ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட் பேஸ் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல்களில் தற்சமயம் அலாய் வீல்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் விண்டோ வாஷர், வைப்பர் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்ப்டடுள்ளன.
காரின் உள்புறம் 8.4 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், எட்டு வழிகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி, டூயல் பேன் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன.
ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல்- 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 160 பிஹெச்பி, 250 என்எம் டார்க் மற்றும் 170 பிஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.
Next Story
×
X