என் மலர்
இது புதுசு

விரைவில் வெளியாகும் எலெக்ட்ரிக் ஜீப் எஸ்யுவி
- ஜீப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியிடுவது பற்றி முக்கிய தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
- எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய திட்டங்களை ஜீப் நிறுவனம் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.
ஜீப் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஜீப் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடுவது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. செப்டம்பர் 8 ஆம் தேதி நிகழ்வை ஜீப் நிறுவனம் 4xe தினம் என அழைக்கிறது.
முதல் எலெக்ட்ரிக் காரை இதுவரை அறிமுகம் செய்யாத நிலையில், ஜீப் நிறுவனம் தற்போது தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷனை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் இ ஹைப்ரிட் மற்றும் 4xe பிராண்டுகளின் கீழ் விற்பனையாகி வருகின்றன.
முன்னதாக ஜீப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தின் ரெண்டர் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. இது காம்பஸ் மற்றும ரெனகேடு போன்று காம்பேக்ட் எஸ்யுவி-யாக இருக்கும் என தெரிகிறது. இந்த கார்களின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் 2023 ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஸ்டெலாண்டிஸ் STLA பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதே பிளாட்பார்மில் இந்த நிறுவனத்தின் மற்ற கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வருகின்றன.
முதல் முறையாக 2021 மார்ச் மாத வாக்கில் ஜீப் நிறுவனம் மேக்னெடோ கான்செப்ட் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடலில் 285 பிஎஸ் பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இ மோட்டார், 70 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டு இருந்தது.