என் மலர்
இது புதுசு
பவர்ஃபுல் என்ஜின் கொண்ட பி.எம்.டபிள்யூ. கார் இந்தியாவில் அறிமுகம்
- முந்தைய கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்தது.
- புதிய கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும்.
ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் பி.எம்.டபிள்யூ. இந்திய சந்தையில் தனது 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. M காரின் விலை ரூ. 78 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் கிடைத்த நிலையில், இந்த வெர்ஷன் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மாடல்- மினரல் வைட், டான்சனைட் புளூ, ஸ்கை ஸ்கிரேப்பர் கிரே மற்றும் கார்பன் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை இரட்டை 12.3 இன்ச் ஸ்கிரீன்கள்- ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர்வியூ கேமரா, பார்க் அசிஸ்ட், ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட்போன் ஹோல்டர், பேடில் ஷிஃப்டர்கள், பானரோமிக் சன்ரூஃப், 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் கம்ஃபர்ட், கம்ஃபர்ட் பிளஸ், ஸ்போர்ட் , இகோ ப்ரோ மற்றும் அடாப்டிவ் என ஐந்துவித டிரைவிங் மோட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.