என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இது புதுசு
![பி.எம்.டபிள்யூ. X சீரிஸ் ஷேடோ எடிஷன் இந்தியாவில் அறிமுகம் பி.எம்.டபிள்யூ. X சீரிஸ் ஷேடோ எடிஷன் இந்தியாவில் அறிமுகம்](https://media.maalaimalar.com/h-upload/2024/05/17/2242605-bmw-x3-xdrive20d-m-sport-shadow-edition-pic.webp)
பி.எம்.டபிள்யூ. X சீரிஸ் ஷேடோ எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிஎம்டபிள்யூ காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- இந்த காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்சின் உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X3 xDrive20d M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ X3 xDrive20d M மாடலின் விலை ரூ. 74 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.
ஷேடோ எடிஷன் மாடல் என்பதால், இந்த காரில் பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட கிட்னி கிரில், பி.எம்.டபிள்யூ.-வின் லேசர் லைட் தொழில்நுட்பம், பிரத்யேகமான புளூ அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெயில் பைப்களில் ஹை-கிலாஸ் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. உள்புறம் M சீரிஸ் மல்டி-பன்ஷன் வசதி கொண்ட ஸ்போர்ட் ஸ்டீரிங் வீல், எலெக்ட்ரிக் சீட் அட்ஜஸ்ட்மென்ட், M ஸ்போர்ட் பேக்கேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த காரில் ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பி.எம்.டபிள்யூ.-வின் டிரைவிங் அசிஸ்டண்ட், பார்க்கிங் அசிஸ்ட் பிளஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பி.எம்.டபிள்யூ. ஷேடோ எடிஷன் காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஞ்சின் 187 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 213 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் பி.எம்.டபிள்யூ. எக்ஸ் டிரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.