search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    Indian Roadmaster Elite
    X

    இந்தியாவில் அறிமுகமான புது பைக்.. ரூ. 71.82 லட்சத்துக்கு என்ன இருக்கு?

    • இதில் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே வசதிகள் உள்ளன.
    • இந்த பைக்கில் 1890சிசி, V-டுவின் எஞ்சின் உள்ளது.

    இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2024 ரோட்மாஸ்டர் எலைட் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் வெளியாகி உள்ளது. லிமிட்டெட் எடிஷன் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த பைக் 1904 இந்தியன் கேமல்பேக்-ஐ பறைசாற்றும் வகையில் உள்ளது.

    புதிய இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் விலை ரூ. 71 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இது நாட்டின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பைக் உலகம் முழுக்க 350 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

    இந்த பைக் பிரத்யேக 3-டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்டிரைக்கிங் ரெட் மற்றும் பிளாக் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பியூவல் டேன்க், எஞ்சின் மற்றும் ஃபூட் ரெஸ்ட் ஆகியவற்றில் எலைட் பிரான்டிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் கிளாஸ் பிளாக் டேஷ், பிளாக்டு அவுட் வின்ட்ஸ்கிரீன், கைகளால் பெயின்ட் செய்யப்பட்ட சிவப்பு நிற ஸ்டிரைப்கள் உள்ளன.

    புதி ரோட்மாஸ்டர் பைக்கில் 10-ஸ்போக்குகள் கொண்ட டைமன்ட் கட் அலாய் வீல்கள், மெட்சீலர் குரூயிஸ்டெக் டயர்களை கொண்டிருக்கின்றன. இதில் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், எல்இடி லைட்டிங் சிஸ்டம், எல்இடி கார்னெரிங் லைட்கள், 12 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2024 ரோட்மாஸ்டர் எலைட் மாடலில் 1890சிசி, V-டுவின் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக் 412 கிலோ எடை கொண்டுள்ளது.

    Next Story
    ×