என் மலர்
இது புதுசு
14 எலெக்ட்ரிக் கார் மாடல்கள் - கியா வேற லெவல் அறிவிப்பு
- கியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய எதிர்கால திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
- இத்துடன் புதிய எலெக்ட்ரிக் கார் விலை விவரங்களையும் கியா வெளியிட்டு உள்ளது.
கியா நிறுவனம் பிரிட்டனில் 2023 சோல் எலெக்ட்ரிக் கார் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. 2021 ஆண்டு சோல் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு முந்தைய ஆண்டை விட 28 சதவீதம் அதிகரித்து இருந்தது. தற்போது இதனை மேலும் அதிகபடுத்த கியா நிறுவனம் மேம்பட்ட சோல் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
முதல் முறையாக புதிய "அர்பன்" அம்சங்கள் "எக்ஸ்ப்ளோர்" கிரேடுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்குகிறது. இதில் மீடியம் ரேன்ஜ் பேட்டரியும் அடங்கும். பிரிட்டனில் புதிய சோல் மாடல்களினி வினியோகம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் துவங்குகிறது. புதிய சோல் மாடல் அர்பன் கிரேடு மற்றும் மீடியம் ரேன்ஜ் பேட்டரி மாடல் விலை 32 ஆயிரத்து 795 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 29 லட்சத்து 82 ஆயிரத்து 117 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கியா சோல் எக்ஸ்ப்ளோர் மற்றும் லாங் ரேன்ஜ் பேட்டரி பேக் விலை 38 ஆயிரத்து 995 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 35 லட்சத்து 45 ஆயிரத்து 896 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கியா நிறுவனத்தின் சிறிய கார் ஆகும். இத்துடன் நிரோ மற்றும் EV6 பிளாக்ஷிப் மாடல்களை கியா விற்பனை செய்து வருகிறது.
2023 வாக்கில் கியா EV9 மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் ட்ரியோ பெயரில் அறிமுகமாகும். இது பெரிய பேட்டரி கொண்ட கியா மாடலாக இருக்கும் என தெரிகிறது. 2027 வாக்கில் உலகம் முழுக்க 14 புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. இதில் பத்து மாடல்கள் புதிய எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்ம் (e-GMP) ஆர்கிடெக்சரில் உருவாகிறது. மற்ற மாடல்கள் ஏற்கனவே விற்பனையாகும் கார்களை தழுவி உருவாக்கப்படுகிறது.