என் மலர்
பிரிட்டன்
- சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்தார்.
- மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
பர்மிங்காம்:
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற நிலையில் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னுக்கும், விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ரிஷப் பண்ட்டும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். பின்னர் தொடர்ந்து பண்ட்-ஜடேஜா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்தார். ஜடேஜா அரைச்சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 60 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் அடித்திருந்தது.
- ரோகித் சர்மாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.
- பரிசோதனை முடிவு அடிப்படையில் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்படும்.
பர்மிங்காம்:
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கில் நீடிக்கிறது.
இதனிடையே, ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளரும் துணை கேப்டனுமான பும்ரா வழிநடத்துவார் என்று பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இன்று ரோகித் சர்மாவுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் முடிவில் அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது உறுதிசெய்யப்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் பும்ரா பெற உள்ளார்.
- முர்ரேவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு அமெரிக்க வீரர் தகுதி.
- இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் வெற்றி.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் தனாசி கோக்கினாகிசை எதிர்கொண்டார்.
இதில் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் சக நாட்டை சேர்ந்த கெக்மனோவிச்சை அவர் சந்திக்கிறார்.
மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் பிரிட்டடை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினர். இதில் 6-4, 7-6, 6-7, 6-4 என்ற செட்களில் முர்ரேவை வீழ்த்திய இஸ்னர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் 3-6, 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரர் நார்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை வீழ்த்தினார்.
- நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார்.
- முதல் சுற்றில் செரீனாவை வீழ்த்தி ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர், ரபேல் நடால் - அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார். இறுதியில் 6-4,6-3,3-6,6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானை, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். 40 வயதான செரீனா காயம் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் 7-5 1-6 7-6 (10-7) என்ற செட்கணக்கில் ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.
- நார்வே, இங்கிலாந்து வீரர்களும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில், துனிசியா வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில், மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நேற்று தொடங்கின.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், தென்கொரியாவின் சூன்வோகிவோனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் ஜான் லெனார்ட் ஸ்ட்ரஃப்பை 4-6, 7-5, 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதேபோல் கேஸ்பர் ரூட் (நார்வே), கேமரூன் நோரி (இங்கிலாந்து) உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர், சுவீடனின் மிர்ஜாம் பிஜோர்க்லுன்டை 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார்.
- கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிப்பு
- ரோகித் சர்மா தனிமைபடுத்தப்பட்டுள்ளதுடன் மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளார்.
லண்டன்:
கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்தின் லீசெஸ்டயர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை நடத்தப்பட்ட ரேபிட் கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹோட்டலில் அவர், தனிமைபடுத்தப் பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா இதில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
முன்னதாக மாலத்தீவு சென்று விட்டு திரும்பிய விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் அவர் தப்போது குணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
- இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 136 ரன்கள் குவித்தார்.
- கேப்டன் ஸ்டோக்ஸ் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின், நாட்டிங்காம் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 539 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 176 ரன்னிலும், ஒல்லி போப் 145 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் லீஸ் 67 ரன்னிலும், விக்கெட் கீப்பர் போக்ஸ் 56 ரன்னிலும் அவுட்டாகினர்.
இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வில் யங் 56 ரன்னும், கான்வே 52 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் இறுதிவரை போராடி 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்திற்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆட்டத்தில் கடைசி நாளான நேற்று இந்த போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்சை விளையாடியது. 100 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை அந்த அணி இழந்த நிலையில் அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 92 பந்துகளில் 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
- உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
- இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது.
லண்டன்:
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில்பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
- இங்கிலாந்தின் ஜோ ரூட், ஒல்லி போப் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தது.
- இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்தின் போல்ட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் அரை சதமடித்து
67 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப்145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் போக்ஸ் அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
- கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து நாடாளுமன்ற குழு அச்சம் தெரிவித்துள்ளது.
- அவரசரத்தில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
உலகம் முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து, அந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கொரோனா முகக்கவசங்கள், கொரோனா தடுப்பு அங்கிக்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டன.
இந்நிலையில் பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள ரூ.38,600 கோடி மதிப்பிலான கொரோனா கவசப் பொருட்கள் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை எரித்து, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அவசரத்தில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் செலவீனங்களை கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழு, பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரூ.38,600 கோடி தொகையை செலவிட்டு பொருட்களை வாங்கி, அவற்றை வீணாக்குவது குறித்த விசாரணையை நாடாளுமன்ற குழு தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.
- இந்த திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வு நடத்தப்படவுள்ளது.
- இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.
லண்டன்:
இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உட்சபட்ச திறன் வெளிப்படும் என்பதால் 100 சதவீதம் ஊதியம் அளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
3 நாட்கள் விடுமுறை திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்கள்.
இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.