search icon
என் மலர்tooltip icon

    கனடா

    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
    • பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    போர்ட் மெக்நீல்:

    கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.

    பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    • கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படங்களில் டிராஸ் தி டெஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த படிஸ்டா, பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
    • கனடாவில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா (TIFF) தொடங்கி நடைபெற்று வருகிறது

    90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஷோவான WWE நிகழ்ச்சியில் வரும் மல்யுத்த வீரர் டேவ் படிஸ்டாவை யாராலும் மறக்க முடியாது. எவ்வளவு வலியையும் தாங்கிக் கொள்வதில் தேர்ந்தவராக படிஸ்டா [55 வயது] புகழ் பெற்று விளங்கினார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் படிஸ்டா நடிகராக கலக்கி வருகிறார்.

     

    மார்வெல் யுனிவெசில் கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படங்களில் டிராஸ் தி டெஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த படிஸ்டா, பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் படிஸ்டாவின் டிரான்ஸ்பர்ண்மெசன் புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

     

    கனடாவில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா (TIFF) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தான் நடித்திருந்த The Last Showgirl படத்தின் திரையிடலுக்காக வந்த படிஸ்டாவின் புது லுக் வைரலாகி வருகிறது.

     

    கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுவெளியில் தோன்றியபோது எடுக்கப்பட்ட படிஸ்டாவின் புகைப்படங்களையும் தற்போதய புகைப்படத்தையும் பதிவிட்டு படிஸ்டாவுக்கு என்னாச்சு என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகினர். தனது ஜிம் பாடி லுக்கில் இருந்து மாறுபட்டு மிகவும் ஒல்லியான தோற்றத்தில் பாடிஸ்டா உள்ளதே இந்த கேள்விக்கு காரணம். டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 'டங்கி' என்ற திரைப்படத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து வெளிச்சம் போட்டு காட்டினார்.

    கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு கால்நடையாகச் செல்லும் ஆவணமற்ற இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்தாண்டு ஜனவரி- ஜூன் காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தனது 'டங்கி' என்ற திரைப்படத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து வெளிச்சம் போட்டு காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கனடா-அமெரிக்க எல்லைக் கடப்பைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் இப்போது அமெரிக்காவை அணுகுவதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழியைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை, மெக்சிகோ எல்லைப் பாதையைப் பயன்படுத்தும் வழக்கமான பாதையிலிருந்து ஊடுருவல்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

    • 70,000 வெளிநாட்டு மாணவர்களின் பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ளது
    • இந்த தீர்மானமானது வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    கடனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு, கனேடியர்களுக்கு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்காலிக வேலைகளுக்காக அதிகளவில் குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

    கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக நேற்று முன் தினம் அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி கனடாவுக்கு வரும் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, 25 சதவீதம் வரை நிரந்தரக் குடியிருப்பு அனுமதியைக் குறைப்பது, படிப்பதற்காக மாணவர்கள் பெர்மிட், வேலைக்கான பெர்மிட் பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த இந்த தீர்மானமானது வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்த முடிவு தங்களின் எதிர்காலக் கனவுகளுடன் கனடாவில் படித்து வரும் கிட்டத்தட்ட 70,000 வெளிநாட்டு மாணவர்களில் பலரின்  பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்திய மாணவர்களே ஆவர்.

    எனவே ஜஸ்டின் ட்ருடோ அரசின் இந்த முடிவை எதிர்த்து வெளிநாட்டு மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.  பிரின்ஸ் எட்வார்ட் மாகாணத்தில் உள்ள சட்டமன்ற கட்டடத்தின் வெளியே இந்திய மாணவர்கள் திரண்டு அரசின் இந்த திடீர் முடிவை எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஓன்டாரியோ, மானிடோபா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர். ஒர்க் பெர்மிட்களின் கால அளவை  அதிகரிப்பது, நிறைந்த குடியுரிமை கிடைப்பதற்கு சிக்கல் இல்லாத நடைமுறையை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை அவர்கள் தங்களின் கோரிக்கைகளாக முன்வைத்து போராடி வருகின்றனர்.

     

     

    • லாபம் பெறுவதற்காகச் சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.
    • சீன எலக்ட்ரிக் வாகனங்கள் ஷாங்காயில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து மட்டுமே அதிகம் வருகின்றன

    சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார [எலெக்ட்ரிக்] வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத சுங்க வரி விதித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலக சந்தையில் தங்களை நிலைநிறுத்தி லாபம் பெறுவதற்காகச் சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.

     

    இதுதவிர்த்து சீனாவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி விதிக்கவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக சீன மின்சார வாகனங்களுக்கு அமரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிக வரி விதித்திருந்தன. தற்போது கனடாவில் இறக்குமதி ஆகும் சீன எலக்ட்ரிக் வாகனங்கள் ஷாங்காயில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து மட்டுமே அதிகம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
    • நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருகிறது.

    கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இது அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் கனடாவில் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார்.

      

    தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகம் பேர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருகின்றனர். இந்த நிலையில்தான் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் மற்ற சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.

     

    இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    • வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது
    • மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்க பரிந்துரைத்துள்ளார்

    ராயல் பேங் ஆப் கனடா 

    உலகம் முழுவதிலும் 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய சர்வதேச வங்கியான ராயல் பேங் ஆப் கனடாவில் [Royal Bank of Canada] சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அதாவது ராயல் பேங் ஆப் கனடா வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த நேடைன் அன் [Nadine Ahn] கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

     

    காதல் உறவு 

    வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் நேடைன் தொடர்பிலிருந்த மேசன் என்ற அந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

    வழக்கு 

    மேலும் இதுதொடர்பாக நேற்று [ஆகஸ்ட் 23] நீதிமாறத்திலும் ராயல் பேங் ஆப் கனடா வங்கி வழக்குத் தொடர்ந்துள்ளது. தனது அறிக்கையில் ராயல் பேங் ஆப் கனடா கூறியதாவது, வங்கியின் விதிகளை மீறி தலைமை நிதி அதிகாரியாக இருந்த நேடைன் ஆன் தனக்குக் கீழ் வேலை செய்துவந்த மேசனுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக உறவு வைத்துள்ளார். ப்ராஜெக்ட் கென் என்ற திட்டத்தில் நேடைன் ஆன் மேற்பார்வையில் பணியாற்றிவந்த மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உட்படச் சிறப்புச் சலுகைகளை வாங்கிக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

     

    நஷ்டஈடு 

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள நேடைன் ஆன், தங்கள் இருவருக்கும் இடையில் எந்தவிதமான காதல் உறவும் இல்லை என்றும் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வங்கி மக்கள் மத்தியில் தனது பெயருக்கு வெளிப்படையாகக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆன் மற்றும் மேசன் ஆகிய இருவரும் வங்கியிடம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1905-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் வைரத்திற்கு பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரம் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் வாங்கியது. அதன் விலையை வெளியிடவில்லை.

    2016-ம் ஆண்டு இதே சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 1,109 காரட் வைரத்தை, 2017-ம் ஆண்டு கிராஃப் டைமண்ட்ஸின் தலைவரான லண்டன் நகைக்கடை வியாபாரி லாரன்ஸ் கிராஃப் $53 மில்லியனுக்கு வாங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மிலி பெற்றுள்ளார்
    • அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார்.

    கனடா நாட்டின் மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டியின் இறுதிக்கட்டம் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.

    'இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மன நலன் மிக்க வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் இந்த வருட அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மிலி என்ற பெண் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

    இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மிலி பெற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார். அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார்.

     

     

    பொறியாளரான மிலி தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். 52 போட்டியாளர்களுடன் இந்த அழகிப் போட்டியில் கலந்துகொண்ட மிலி, இளைஞர்களின் தற்கொலை எண்ணங்களை மட்டுப்படுத்த யோகாவின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். 

    • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    டொரண்டோ:

    கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டை சந்திக்கிறார்.

    • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    டொரண்டோ:

    கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிஸ்மோவா உடன் மோதினார்.

    இதில் அனிஸ்மோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அனிஸ்மோவா, சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார்.

    நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீராங்கனை டயானா ஸ்னெய்டர், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார்.

    • சுமார் 50 மீன்கள் வரை கூட்டமாக நெளிந்து கொண்டிருந்தது பாம்புக்கூட்டத்தை நினைவூட்டின.
    • வீடியோ காட்சிகள், எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

    விமானத்தின் சரக்கு பெட்டகம் உடைந்து வெளியேறிய விலாங்கு மீன்கள், பாம்புகள் போல நெளியும் காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகிறது.

    கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து வான்கூவர் சர்வதேச விமானநிலையத்திற்கு விமானத்தில் அனுப்பப்பட்டது அந்த சரக்குப்பெட்டி. அதை ஒரு கப்பலில் ஏற்றும்போது எப்படியோ பெட்டகத்தில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்த விலாங்கு மீன்கள் கொட்டின. அவை அரை மீட்டர் நீளமுள்ள பெரிய விலாங்கு மீன்கள் என்பதால் அவை நெளிவது பாம்புகளின் தோற்றத்தை வெளிப்படுத்தின.

    சுமார் 50 மீன்கள் வரை கூட்டமாக நெளிந்து கொண்டிருந்தது பாம்புக்கூட்டத்தை நினைவூட்டின. அவற்றை மீண்டும் பிடித்துபெட்டகத்தில் அடைத்து பாதுகாப்பாக கப்பலேற்றி அனுப்பினர்.

    இதுபற்றிய வீடியோ காட்சிகள், எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.


    ×