என் மலர்
- பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.
- இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், "7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.
உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உற்சாகமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பங்களிப்பே காரணம்.
உங்கள் ஒவ்வொருவருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு என கவர்ச்சி நடிகைகள் தனியாக இருந்தனர்.
- ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய திரை உலகில் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு என கவர்ச்சி நடிகைகள் தனியாக இருந்தனர். தமிழ் திரை உலகில் அனுராதா, டிஸ்கோ சாந்தி, சில்க் சுமிதா மேலும் சில நடிகைகள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
வருடங்கள் செல்ல செல்ல கதாநாயகிகளே ஒரு பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்கியதால் கவர்ச்சி நடிகைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, ஒரு பாடலுக்கு என்று தனியாக நடனமாடும் நடிகைகளே திரை உலகில் இப்போது இல்லை.
அந்த வகையில் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிரபல கதாநாயகிகளே ஒரு பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் சம்பளத்தை பெற்று வருகின்றனர். திரை உலகில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு நடிகைகள் வாங்கும் சம்பளம் வருமாறு:-
சமந்தா:- ரூ 5 கோடி.
தீபிகா படுகோனே:-ரூ.2 முதல் ரூ.3 கோடி.
கத்ரீனா கைப்:- ரூ.2 முதல் ரூ.3 கோடி
தமன்னா:- ரூ.3 கோடி
மலைக்கா அரோரா:-ரூ.1முதல் ரூ.1.5 கோடி.
சன்னி லியோன்:- ரூ.1 முதல் ரூ. 1.5 கோடி.
இவ்வாறு ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகைகளின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது.
- ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம்
- மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகியது . படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதில் ஃபஹத் ஃபாசிலுடன் சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரியளவில் ஹிட்டாகியது குறிப்பாக டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வந்தது.
படத்தில் பகத் பாசில் ரீல் செய்யும் காட்சிகளை மக்கள் இன்ஸ்டாகிராமில் ரீ கிரியேட் செய்து வந்தனர். படத்தில் பகத் பாசில் முற்றிலும் மாறுபட்ட கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி சில மாதங்களுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரியளவில் வைரலாகி வந்தது. பகத் ஃபாசிலின் கதாப்பாத்திரமான ரங்கன் சேட்டா குழந்தைகள் முதல் பெரியவர் வரை கவரப்பட்டது.
தற்பொழுது இந்த படத்தை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் சூப்பர் ஸ்டாரான பாலய்யா , ரங்கன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.
இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியைடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அனந்த் `நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் அனந்த் . இந்நிலையில் ஆனந்த் தற்பொழுது இயக்குனர் அவதாரத்தை எடுத்துள்ளார்.
தற்பொழுது அனந்த் `நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கி மசாலா பாப்க்கார்ன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர் ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளனர்.
அதில் ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ள `ஓகே சொல்லிட்டா' என்ற பாடலின் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலின் காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. இப்பாடலின் வரிகளை ஆர்ஜே விஜய் எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி இருக்கும் திரைப்படம் வேட்டையன்.
- படத்தின் டப்பிங் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா தகுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன் முடிந்தது.
படத்தின் டப்பிங் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
அண்மையில் வெளியான ராயன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் துஷாரா விஜயன். வேட்டையன் திரைப்படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா.
துஷாரா வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் துஷாராவின் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டும் வகையில் அவர் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’படத்தில் நடித்து வருகிறார்.
- கமல்ஹாசன் இன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.
இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் 'தக் லைஃப்'படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். படத்தில் சிம்பு கமலுக்கு மகனாக நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதற்கான டப்பிங் பணிகள் கடந்த வாரம் நடைப்பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவர் Cap மற்றும் Cooling Glass அணிந்துள்ளார். இவர் அருகில் ஒரு சிறுவனும் அவரைப் போலவே Cap மற்றும் Cooling Glass அணிந்துள்ளான். இந்த புகைப்படம் பார்க்க மிகவும் கியூட்டாக உள்ளது. தற்பொழுது இந்த படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் பாடலான மேனா மினிக்கி மற்றும் தங்கலான் வார் சாங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. விழாவில் பிரபலங்கள், இயக்குனர்கள், நடிகர் சிவகுமார், படக்குழு மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
அதில் விக்ரம் பேசியது
படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். அவருடைய ஒப்பனை கலைஞனான டாமிற்கு நன்றி தெரிவித்தார். தங்கலான் படத்தில் நடித்த சக நடிகர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும், இயக்குனருக்கும் நன்றி தெரிவித்தார். தங்கலான் படத்தில் ஒப்புக்கொண்டதற்கு காரணம் அவருக்கும் , தங்கலான் கதாப்பாத்திரத்திற்கும் ஒற்றுமை இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை என்னால் உணர முடிந்தது. என கூறினார்.
அப்பொழுது அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பற்றி பகிர்ந்துக் கொண்டார் " எனக்கு நடிப்பில் மிகப் பெரிய ஆர்வம் இருந்தது. சின்னதோ பெரிதோ எதோ ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என வெறி இருந்தது . ஆனால் கல்லூரி படிக்கும் போது ஒரு நாள் விபத்தில் சிக்கிக் கொண்டேன், என்னுடைய கால் உடைந்தது.
அதற்கு பிறகு 3 வருடங்கள் என்னுடைய வாழ்கையை மருத்துவமனையில் கடத்தினேன். 23 அறுவை சிகிச்சை நடந்தது . மருத்துவர்கள் என்னால் எழுந்து நடக்கவே முடியாது என்று சொன்னார்கள். ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் , கனவும் லட்சியம் மட்டும் எனக்கு இருந்தது. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தால் சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்திட மாட்டோமா என்று ஏங்கினேன். இந்த போராட்டத்திலேயே 10 வருடங்கள் கழிந்தது. நடக்கவே முடியாது என்ற சொன்னவர்கள் முன் என்னால் நடக்க முடிந்தது. அனைவரும் நடிப்பு வரவில்லை இந்த துறையை விட்டு வேறு வேலை பாரு என்று சொன்னார்கள். ஆனால் என்னை நானே தேர்த்திக் கொண்டு படங்களில் நடித்தேன். அன்று நான் விட்டு இருந்தால் இன்று உங்கள் முன் நின்று பேசி இருக்க முடியாது.
சரி சினிமாவில் இன்றும் வெற்றி பெறாமல் இருந்தால் என்ன செய்வாய் என்று கேட்டால், இன்றும் நான் சினிமாவிற்காக முயற்சி செய்துக் கொண்டே இருப்பேன்." என்று கூறினார். இந்த பதிலுக்கு அரங்கமே அதிர்ந்தது.
தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். இதுவரை நாம் பாத்திராத கதாப்பாத்திரத்தில் லுக்கில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் காட்சியளிக்கிறார். படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில். படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த ஸ்கெடியுளில் சண்டை காட்சியை படமாக்கவுள்ளனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு பணி 10 நாட்கள் நடைப்பெறவுள்ளது. மறுப்பக்கம் விடா முயற்சியின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. திரிஷா மற்றும் அர்ஜூன் இடையே காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் காட்சி படுத்தப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து நடிக்கிறார். இதனால் இரண்டு படங்களுமே சொன்ன தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
- மீனா என்ற கதாப்பாத்திரத்தில் அன்னா பென் நடித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதுக்குறித்து சூரி அவரது எக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன் பதிவு ஒன்றை பதிவிட்டார் அதில் இப்படம் உண்மைக்கு மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட படம், இப்படத்தில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் கொட்டுக்காளி." என்று பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான அன்னா பென் அவரது கதாப்பாத்திரத்தை குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மீனா என்ற கதாப்பாத்திரத்தில் அன்னா பென் நடித்துள்ளார்.
"மீனா என்னுள் ஒரு அங்கம் என்பது நான் அறிந்ததே இல்லை, பல அற்புதமான விஷயங்களில் கொட்டுக்காளி ஒரு வெளிப்பாடு. இந்த கோட்டுக்காளி அவள் எவ்வளவு அன்பானவளாக இருக்கிறாளோ, அதே போல் வலிமையும், நெகிழ்ச்சியும் உடையவள். மதுரை வழியாக இந்த பயணத்தில் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்"
திரைப்படம் மற்றொரு வெற்றிப்படமாக சூரி மற்றும் வினோத் ராஜ்-க்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மார்ட்டின் படத்தின் டீசர் 97 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.
- மார்ட்டின் திரைப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மார்ட்டின் படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை அர்ஜூன் எழுதியுள்ளார்.
கடந்தாண்டு வெளியான மார்ட்டின் படத்தின் டீசர் 97 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
மார்ட்டின் திரைப்படம் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்துடன் போட்டியா என்று கேள்வி கேட்க பட்டது. இதற்கு பதில் அளித்த துருவா சார்ஜா, மார்ட்டின் திரைப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கங்குவா திரைப்படத்தை 10 ஆம் தேதி பாருங்கள். என் படத்தை 11 ஆம் தேதி பாருங்கள் என்றார்.
இந்த நிகழ்வில் துருவ சார்ஜாவிடம் பாலிவுட்டில் எந்த நடிகர் பிடிக்கும் என்று கேள்வி கேட்க பட்டது. இதற்கு பதில் அளித்த துருவ சார்ஜா, பாலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் சஞ்சய் தத் என்று கூறினார்.
மேலும் மார்ட்டின் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கேடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். இதில் சஞ்சய் தத் என்னுடன் நடித்துள்ளார். சிறந்த நடிகருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி என்றார்.
அதுபோல், தெலுங்கில் எந்த நடிகர் பிடிக்கும் என்ற கேள்விக்கு ஜூனியர் என்.டி.ஆர். எனக்கு பிடிக்கும் என்று பதில் அளித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார்.
- இப்பாடலை காவலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் '' இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாடலான 'சுத்தமல்லி' இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை காவலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார்.
இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் திரைப்படம் இதுவரை 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
- தனுஷ் நடித்த படங்களிலே ராயன் தான் அதிகம் வசூலித்த படமாகும்.
நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன்.
2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் தான் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது. ராயன் திரைப்படம் இதுவரை 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தனுஷ் நடித்த படங்களிலே ராயன் தான் அதிகம் வசூலித்த படமாகும்.
இந்நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் பாக்கெட் வீடியோ பாடலை ராயன் படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.