என் மலர்
- நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நானி மற்றும் மிருணாள் தாகூரின் கெமிஸ்டிரி நன்றாக மக்களிடம் வொர்க் அவுட் ஆகியது.
இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். சமீபத்தில் படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இன்று எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவிற்கு நாட் எ டீசர் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் எஸ்ஜே சூர்யா ஒரு கொடூர வில்லன் காவல் அதிகாரியாக வருகிறார். நானி வீடியோ முடிவில் ஹேப்பி பர்த்டே சார் என்று மாஸாக கூறுகிறார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- பிரதர் படத்தின் முதல் பாடல் "மக்காமிஷி" தற்பொழுது வெளியாகியுள்ளது.
- பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரதர் படத்தின் முதல் பாடல் "மக்காமிஷி" தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை பால் டப்பா பாடியுள்ளார். மக்காமிஷி என்ற வார்த்தைக்கு கெத்து, திமிரு, ஸ்வாக் என்று அர்த்தம். இப்பாடம் ஒரு ஜாலியான வைப் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடலின் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் 'உழைப்பாளர் தினம்' சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
- படம் நிறைவடைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.
சென்ற வாரம் சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் 'உழைப்பாளர் தினம்' சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சிங்கப்பூர் நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் தமிழ்நாட்டில் இருந்து சென்று சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். முதல் பாதியில் காமெடி காதல் என்று பரபரப்புடன் சென்றது. இரண்டாவது பாதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை அழுத்தத்துடன் கனமான காட்சிப்படுத்துதலில் சென்ற கதை கிளைமாக்ஸ் இல் யாரும் எதிர்பார்க்காத அழகான திருப்பத்துடன் நிறைவடைந்தது.
படம் நிறைவடைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். அதில் உச்ச பட்சமாக ஒரு வெளிநாட்டு தொழிலாளர், நடிகரும் இணை தயாரிப்பாளருமான 'சிங்கப்பூர்' துரைராஜ் அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு "எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையை எங்களுடைய குடும்பங்களுக்கு கூட தெரியாது, எங்களுடைய கஷ்டம் எங்களுடைய இருக்கட்டும் எதற்கு குடும்பத்திற்கு என்று சொல்ல மாட்டோம். ஆனால், எங்களுடைய வாழ்க்கையை மிக அழகாக காட்சி ஆக்கி அதனை கமர்சியல் உடன் சிரிக்க வைத்து எங்களையும் சிந்திக்க வைத்தது 'உழைப்பாளர் தினம்' படம் என்று ஆனந்த கண்ணீருடன் நன்றி பாராட்டியுள்ளார் .
மற்றொரு வெளிநாட்டு தொழிலாளர் "என்றாவது ஒருநாள் எனது சொந்த ஊரில் வெற்றிகரமாக சென்று நிரந்தரமாக வாழ்வேன் அதற்கு 'உழைப்பாளர் தினம்' படம் தான் எனக்கு உத்வேகம்" என்றார். படம் திரைக்கு வரும் போதும் மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் துபாயில் சிறப்பு காட்சி திரையிட படக் குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர்.
நடிகர் மற்றும் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் சென்ற வருடம் வெளியான 'வட்டார வழக்கு' படத்தில் ஆக்ஷனில் மிரட்டி இருந்தார். 'உழைப்பாளர் தினம்' படத்தை நடித்து இயக்கி நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. "வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தொழிலாளர்களும் இந்த உழைப்பாளர் தினம் படத்தைக் கொண்டாடுவார்கள்" என்கிறார் இயக்குனர் மற்றும் கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.
- நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
2007 ஆம் ஆண்டுக்கு பின் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பையை தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.
அவ்வகையில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.
அண்மையில் நடந்த முடிந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கிரிக்கெட் வீரர் பும்ரா தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.
- இப்படம் வரும் 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது.
மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது Deadpool & Wolverine என்ற படம் வெளியாக உள்ளது.
ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் வரும் வாரம் வெளியாகவுள்ள டெட்பூல் & வோல்வரின் படத்திற்கான கொண்டாட்டங்களில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாவதை ஒட்டி ஐதராபாத்தில் இப்படத்தின் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஹக் ஜேக்மேன் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உணவக உரிமையாளர்களின் பெயர்களை பெயர்களைக் காண்பிக்க வேண்டும் உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
- உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக ரசின் இந்த உத்தர இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் ‘வாழை’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
- முதன்முதலாக நான் படம் இயக்க நினைத்தது ‘வாழை’ படம். என்னை பாதித்த கதை இது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி பிரபல இயக்குனராக திகழ்பவர் மாரிசெல்வராஜ். தற்போது 'வாழை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த சிறுவர்கள் ஒரு சிலர் காயத்துடன் தப்பித்தனர். அந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அந்த லாரியில் சின்ன வயதில் மாரி செல்வராஜும் பயணித்து, அந்த விபத்திலிருந்து உயிர் தப்பினார். தன்னுடைய சிறு வயது வாழ்க்கையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தை அவரின் மனைவி திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் திவ்யா மாரி செல்வராஜ், ஹாட்ஸ்டார் நிர்வாகி கிருஷ்ணன் குட்டி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், ராம், தயாரிப்பாளர் தாணு, ரெட் ஜெயண்ட் செண்பக மூர்த்தி, தயாரிப்பாளர், நடிகர் ஜே.எஸ்.கே., இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்,நடிகர் கலையரசன், நடிகைகள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
முதன்முதலாக நான் படம் இயக்க நினைத்தது 'வாழை' படம். என்னை பாதித்த கதை இது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் இயக்கி கொண்டிருந்தபோதே என் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அப்படிதான் 'வாழை' படம் தொடங்கியது. பா.ரஞ்சித், தாணு ஆகியோருடன் அடுத்ததாக படங்கள் பண்ண இருக்கிறேன்.
நான் பட்ட கஷ்டங்கள் நீங்கள் பட வேண்டும் என நடிகர்களிடம் வேலை வாங்கினேன். கலையரசன் 100 கிலோ, திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கி படத்துக்காக கடுமையாக உழைத்தனர். என் வாழ்க்கையில் மீள முடியாத துயரம் 'வாழை' படம்.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
- வணங்கான் என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பரபரப்பான படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே, வணங்கான் படத்தின் பெயருக்கு எதிராக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் தடை விதிக்கக்கோரி ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வணங்கான் என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த மனு மீதான விசாரணையின்போது, " 2 ஆண்டுகள் அமைதியாக இருந்த பின், பணம் பறிக்கும் நோக்கில் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளார்" என்று இயக்குனர் பாலா தரப்பு கூறப்பட்டது.
இந்நிலையில், வணங்கான் பெயருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த்.
- அந்தகன் திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாரிகியுள்ளது.
திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதே தேதியில் தான் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படமும் வெளியாகவுள்ளது.
அந்தகன் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும்.
மேலும் அந்தகன் திரைப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.ஆதி
- படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். கடந்த மாதம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் பி.டி சார் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்து இருக்கிறார் ஆதி. ஆனால் இம்முறை இயக்குனருடன் சேர்ந்து தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.
அவர் அடுத்ததாக இயக்கி நடித்து இருக்கும் படத்திற்கு கடைசி உலகப்போர் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. ஆதி நடிக்கும் 8 - வது திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஒரு ஜாலியான கமெர்ஷியன் திரைப்படம் இயக்கி இருப்பார் என்று நினைத்தால், அவர் முற்றிலும் மாறுப்பட்ட உலகப்போர் கதைக்களத்துடன் ஒரு சீரியசான விஷயத்தை கையில் எடுத்துள்ளார்.
வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் மற்றும் ஒளிபதிவு உலகத்தரத்தில் உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் மிக அழகாக செய்துள்ளனர். இது யாரும் எதிர் பார்க்காத ஒரு விஷயம். எம்மாதிரி திரைப்படமாக இது இருக்க போகிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது.
- திரைப்படம் இன்னும் 7 நாட்களில் வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஓ ராயா பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஏ.ஆர் ரகுமானுடன் கனவ்யா துரைசாமி ஆகியோர் இந்த படலை இணைந்து பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி சிம்புதேவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.
கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.
இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான `தக்கிட தகிமி' என்ற பாடல் தேவாவின் குரலில் தற்பொழுது வெளியாகியுள்ளது. கோல்ட் தேவராஜ் இப்பாடலை எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.