என் மலர்
- திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
- மகாராஜா திரைப்படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.
இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. அன்று முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.
இதன் எதிரொலியால், படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது.
இந்நிலையில், மகாராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மகாராஜா படக்குழு இன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும், விஜய்யுடன் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்.
- திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவாவின் முதல் பாடல் வரும் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார் மாறி செல்வராஜ்
- சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாம்மன்னன் திரைப்படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசிப் படம் இதுவே.
தற்பொழுது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவே.
சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன் மாரி இயக்கிய கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதல் பாடலான தென்கிழக்கு தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் தீ பாடியுள்ளார். இப்பாடல் பள்ளி சிறுவனுக்கும் அவனது ஆசிரியைக்கும் இடையே உள்ள அழகான உறவை மையப்படுத்தி அமைந்துள்ளது.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் பி.டி சார் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
- மீண்டும் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்து இருக்கிறார் ஆதி.
2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். கடந்த மாதம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் பி.டி சார் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்து இருக்கிறார் ஆதி. ஆனால் இம்முறை இயக்குனருடன் சேர்ந்து தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.
இப்படத்திற்கு கடைசி உலகப்போர் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. ஆதி நடிக்கும் 8 - வது திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மிகவும் வித்தியாசமான போஸ்டராக இது அமைந்துள்ளது. முகத்தில் ரத்தம் வழிந்தும், தலைக்குள் போர், வன்முறை, குண்டு வெடிப்பு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நாளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டங்களில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா.
- கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவனான வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டங்களில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா. அனைத்து பிரபல நட்சத்திர நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் என பல மொழிப் படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் நடித்த எஜமான், வீரா, நாட்டாமை, நாடோடி மன்னன், முத்து, அவ்வை சண்முகி என பல திரைப்படங்கள் மெகா ஹிட்டானது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவனான வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார். இச்சம்பவத்திற்கு பிறகு மீனாவின் இரண்டாம் திருமணத்தைப் பற்றிய வதந்திகள் அதிகமாக பரவி வந்தது. மீனா அவரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார், இந்த திரைப் பிரபலத்தை திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது.
அண்மையில் கூட, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரின் மகன் ஒருவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவருடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக பேசியது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது.
இந்நிலையில், நடிகை மீனா அவரது எக்ஸ் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு அதில் வதந்திகளை வெறுப்பாளர்கள் தான் உருவாக்குவார்கள், அதனை ஏமாளிகள் பகிர்வர் மற்றும் முட்டாள்கள் அதனை நம்புவர் என பதிவிட்டுள்ளார்.
இப்பதிவு சமீபத்தில் இவரைப் பற்றிய வதந்திக்கு வாயடைக்கும் விதமாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் அனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துக் கொண்ட புகைப்படம் வைரலானது.
- ஜான்வி கபூர் அடுத்ததாக உலாஜ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஜான்வி கபூர் முதன்மையாக இருக்கிறார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது கவர்ச்சிகரமான போட்டோ ஷூட்களை எடுத்து புகைப்படங்களை பதிவிடுவார்.
இவர் சமீபத்தில் அனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. தற்பொழுது வந்த செய்தியின் அடிப்படையில் ஜான்வி கபூர் மருத்துவமனையில் ஃபுட் பாய்சனிங் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது தந்தையன் போனி கபூர் சொன்ன தகவலில் அடிப்படையில் இப்பொழுது ஜான்வி நலமாக உள்ளார் எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் பூர்ண குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.
ஜான்வி கபூர் அடுத்ததாக உலாஜ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து ஜூனியர் எண்டிஆர் உடன் இணைந்து தேவரா- பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
- 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடலான நீ இருக்கும் ஒசரத்துக்கு என்ற பாடல் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார்.
- சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாம்மன்னன் திரைப்படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசிப் படம் இதுவே.
தற்பொழுது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன் மாரி இயக்கிய கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதல் பாடலான தென்கிழக்கு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கம் கண்டனம்.
- குறிப்பிட்ட பட காட்சிகளை நீக்க கோரிக்கை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தனராஜ் தலைமை வகித்து பேசும்போது.
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2-திரைப்படத்தில் நடிகர் மனோபாலா நடிக்கும் ஒருசில காட்சிகளில் இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ரூ.300 கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவைகள் செய்ய முடியும் என்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த காட்சிகள் மூலம் இ-சேவை மைய ஆபரேட்டர்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மைய தொழில் மீதும், ஆபரேட்டர்கள் மீதும் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காட்சிகள் இருப்பதால் குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் இந்தியன்-2 திரைப்படத்தில் இருந்து நீக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் படக்குழுவினருக்கும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.
தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரஞ்சித், நவீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
- இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரதர் படத்தின் முதல் பாடல் "மக்காமிஷி" விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது.
தற்போது பிரதர் படக்குழு வெளியிட்டுள்ள தகவல்களில் மக்காமிஷி படத்தின் முதல் பாடல் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இத்துடன் இது தொடர்பாக ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சர்தார் 2 கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது.
- இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது. கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் 2 திரைப்படம் கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், நேற்று காலை இந்த படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.
அப்போது எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். உயிரிழிந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
- இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.
அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படம் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.
'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் வரவேற்பை பெற்றநிலையில், இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.