search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இந்தியன் 2 படம் இன்று காலை வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
    • இன்று ஒருநாள் மட்டும் 5 சிறப்பு காட்சிகள் வரை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் இந்தியன் 2.

    லைகா நிறுவனம் தயாரித்து உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    பல சர்ச்சைகள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகியுள்ளது. இன்று ஒருநாள் மட்டும் 5 சிறப்பு காட்சிகள் வரை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி, இந்தியன் 2 படம் இன்று காலை வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.

    இந்நிலையில், சர்ச்சைகளுக்கு பேர் போன கூல் சுரேஷ் சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்குக்கு இந்தியன் தாத்தா வேடமணிந்து கையில் தேசியகொடியுடன் குதிரையில் சவாரி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் படத்தில் வர்மக்கலை தொடர்பான தனது முத்திரை பயன்படுத்தப்பட்டது.
    • இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது பெயர் சேர்க்க வேண்டும்- மனுதாரர்

    சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியன் படத்தில் வர்மக்கலை தொடர்பான தனது முத்திரை பயன்படுத்தப்பட்டது.

    அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தியன் 2 திரைப்படத்தில் தனது பெயரை சேர்க்க வேண்டும் என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வர்மக்கலை மற்றும் தற்காப்புக்கலை அகாடமி ஆசான் படத்திற்கு தடைகோரி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு தொடர்பான விசாரணையில் சங்கர், கமல் ஹாசன், பட தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

    சங்கர் சார்பில் ஆஜரான வழக்கிறஞர் இந்த படத்திற்காக கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான கலைஞர்கள், பணியாளர்கள் வேலை செய்துள்ளனர். வெளி மாநிலம், வெளிநாடு என பல்வேறு இடங்களில் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தை தடைசெய்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், பண இழப்பீடு ஏற்படும் எனக் குறிப்பிட்டது.

    பின்னர் நீதிதிமன்றம் தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
    • லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன்.

    தமிழ், இந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.

    தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ்-2 என்ற வெப் தொடரில் நடித்த போது சக நடிகரான விஜய்வர்மாவுடன் காதல் உருவானது. இந்த தொடரில் படுக்கையறை காட்சிகளில் இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர்.


    தொடர்ந்து தமன்னாவும், விஜய் வர்மாகவும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் தங்கள் காதலை உறுதி செய்தனர். தமன்னாவுடனான காதல் பற்றி விஜய் வர்மா கூறியதாவது:-


    காமக்கதைகளுக்கு பிறகு எங்கள் உறவு தொடங்கியது. முதலில் நாங்கள் சக நடிகராக சந்தித்தோம். லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன். 2005-ம் ஆண்டு நான் ஐதராபாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தேன். தமன்னா மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் நிலை நிறுத்திய மும்பை பெண். நான் ஐதராபாத் பையன். தமன்னா தமிழ், தெலுங்கு சரளமாக பேசுகிறார் என்றார். திருமணம் குறித்து தமன்னா கூறும்போது, "திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. அது ஒரு விருந்து அல்ல" என கூறினார்.

    • இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் இந்தியன் 2. நாளை (ஜூலை 12) வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியன் 2 படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை ஒருநாள் மட்டும் ஐந்து காட்சிகள் வரை திரையிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. முன்னதாக வெளியான திரைப்படம் ஒன்றின் சிறப்பு காட்சி கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    லைகா நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு மதகஜராஜா எனும் திரைப்படத்தை இயக்கினார்.
    • படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்தது.

    சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 பட்டித் தொட்டி எங்கும் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி வசூலை எட்டிய முதல் திரைப்படம் இதுவே.

    சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு மதகஜராஜா எனும்  திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

    படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்தது. அண்மையில் இப்படத்தை குறித்து சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

    மத கஜ ராஜா திரைப்படம் அண்மையில் மிகவும் நெருக்கமான வட்டாரத்திற்கு மட்டும் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்திற்கான வரவேற்பு மிகவும் நன்றாக இருந்தது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்ச்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
    • அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌

    தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

    முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

    ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும் தயாரிப்பாளரும், தன்னுடைய காந்த குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆரவாரமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமானவர் ஆனந்த்.
    • இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது.

    ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் ஆனந்த். இந்நிலையில் ஆனந்த் தற்பொழுது இயக்குனர் அவதாரத்தை எடுத்துள்ளார்.

    ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு "நண்பன் ஒருவன் வந்தப் பிறகு" என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளனர்.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்பொழுது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்
    • வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார்.

    2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் , திரிஷா, வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து வெளியானது மங்காத்தா திரைப்படம். இப்படம் அஜித்தின் 50- வது திரைப்படமாகும், இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்தது.

    தற்பொழுது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார், படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

     

    ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என கமெண்ட்சில் பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்."
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.

    சில நாட்களுக்கு முன் படத்தின் சென்சார்ஷிப் போர்ட் U/A சான்றிதழை வழங்கியது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியுபில் 30 லட்சத்திற்கும் மேல் பார்வைகளை பெற்றுள்ளது.

    தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் மேலும் ஒரு வெற்றிப் படமாக விஜய் ஆண்டனிக்கு அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார்.
    • City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.

    City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி '. இப்படத்தின் படப்பிடிப்பு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.

    தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

    வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும் சென்னையில் படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.

    புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

    இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்கின்றனர்.
    • அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் "யோலோ" திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.

    வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக, இப்படம் உருவாகிறது.

    இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

    யோலோ என்றால் வாழ்க்கை ஒரு முறை தான் அதைச் சரியாக வாழுங்கள் என்பது தான். இதைப் படம் வந்தவுடன் புரிந்து கொள்வீர்கள் நன்றி.

     

    நாயகன் தேவ் பேசியதாவது...

    எங்களை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. இது தமிழில் எனக்கு மூன்றாவது படம், இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இயக்குநர் கதை சொன்ன போது, எனக்குப் பிடித்திருந்தது ஆனால் அவர் தயங்கினார், ஆனால் இரண்டு நாள் கழித்து நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்றார். நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையைக் கண்டிப்பாகக் காப்பாற்றுவேன், படம் பற்றி அடுத்த விழாவில் இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி.

    இயக்குநர் அமீர் பேசியதாவது...

    ஒரு துவக்க விழா, இங்குள்ள பலருக்கு இது வழக்கமான விழா. ஆனால் சாமிற்கும் அவரது குழுவிற்கும் அவர்கள் வாழ்க்கையைத் துவக்கும் விழா. எனக்கு சேதுவைத் துவங்கிய நாள் தான் ஞாபகம் வருகிறது. 93ல் பாலாவின் அகிலன் பூஜை போட்ட அன்றே நின்று போய்விட்டது. தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களிடமும் அந்தக்கதை போய் வந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பின் அது சேதுவாக மாறியது. இங்கு தான் பூஜை போட்டோம், பூஜை அன்று தொழிலாளர்கள் பிரச்சனையில் நின்று போனது. 7 வருடம் கழித்து தான் முடிந்தது. அப்புறமும் படம் வரவில்லை. என்றாவது ஒரு நாள் படம் வரும் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். பாலா தன் ஒட்டுமொத்த உழைப்பையும் தந்து, ஒரு தலைமுறையினருக்கு வாழ்வை வாய்ப்பை தரும் படைப்பை உருவாக்கி வைத்திருந்தார். எங்கள் கிளையைப் பரப்ப சாம் வந்திருக்கிறான் என நம்புகிறேன். இந்தப்படம் பெரிய வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன் நன்றி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.
    • இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஞானவேல்ராஜா சமீபத்தில் பங்கேற்ற நேர்காணலில் கங்குபா படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கங்குவா இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளதாகவும். கங்குவா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் துவங்கும் எனவும் , 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

    இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×