என் மலர்
சினிமா
காமகதைக்கு பின் எங்கள் காதல் கதை- தமன்னாவுடனான நெருக்கம் பற்றி விஜய் வர்மா
- தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
- லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன்.
தமிழ், இந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ்-2 என்ற வெப் தொடரில் நடித்த போது சக நடிகரான விஜய்வர்மாவுடன் காதல் உருவானது. இந்த தொடரில் படுக்கையறை காட்சிகளில் இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர்.
தொடர்ந்து தமன்னாவும், விஜய் வர்மாகவும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் தங்கள் காதலை உறுதி செய்தனர். தமன்னாவுடனான காதல் பற்றி விஜய் வர்மா கூறியதாவது:-
காமக்கதைகளுக்கு பிறகு எங்கள் உறவு தொடங்கியது. முதலில் நாங்கள் சக நடிகராக சந்தித்தோம். லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன். 2005-ம் ஆண்டு நான் ஐதராபாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தேன். தமன்னா மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் நிலை நிறுத்திய மும்பை பெண். நான் ஐதராபாத் பையன். தமன்னா தமிழ், தெலுங்கு சரளமாக பேசுகிறார் என்றார். திருமணம் குறித்து தமன்னா கூறும்போது, "திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. அது ஒரு விருந்து அல்ல" என கூறினார்.