என் மலர்
- 1977 ஆம் ஆண்டு தி டியூவலிஸ்ட் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.
- 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்கார் தற்போது உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் சை ஃபை , கிரைம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கதைகளை இயக்கும் திறமைவாய்ந்த இயக்குனர் ரிட்லி ஸ்காட். 1977 ஆம் ஆண்டு தி டியூவலிஸ்ட் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.
ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.
மேலும், இது ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. போர்க்கள காட்சிகளுக்கு இன்றளவும் முன்னோடியாக இப்படம் விளங்குகிறது. தற்போது வெளியான 'கேம் ஆப் திரோன்ஸ்' மற்றும் 'பாகுபலி' போன்ற படங்களிலும் இந்த படத்தின் தாக்கத்தை காண முடியும். ஆனால் ரிட்லி ஸ்காட் 2000- ஆண்டிலேயே அப்பேற்ப்பட்ட படைப்பை படைத்தது இன்றும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.
கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்கார் தற்போது உருவாக்கியுள்ளார். இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. பால் மெஸ்கல் மற்றும் பெட்ரோ பாஸ்கல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம், வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், ஐரோப்பிய திரையரங்குகளிலும் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நவம்பர் 22-ந் தேதி அமெரிக்காவிலும் வெளியாகிறது. இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'.
- சர்ஃபிரா படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று மும்பையில் நடைப்பெற்றது
சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.
இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.
தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று மும்பையில் நடைப்பெற்றது இதில் சர்ஃபிரா படக்குழுவினரும், நடிகர் சூர்யா, ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா பங்கேற்றனர்.
அப்பொழுது அக்ஷய் குமாருடன் இணைந்து சூர்யா மற்றும் ஜோதிகா புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஒரு படத்திலாவது எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை.
- அனுபமா பரமேஸ்வரனுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனுபமா பரமேஸ்ரன். தொடர்ந்து தனுசுடன் கொடி, அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே, ஜெயம் ரவி ஜோடியாக சைரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வாய்ப்புகள் சரிவர இல்லாததால் தெலுங்கு மொழியில் பல புதிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு திரை உலகில் அனுபமா பரமேஸ்வரனுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது.
இந்தநிலையில் அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வில்லியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஒரு படத்திலாவது எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
சில நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரங்களை பார்க்கும் போது நமக்கு ஏன் இது போன்ற கதாபாத்திரங்கள் அமைவதில்லை என ஏங்குவேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் நடிக்க நம்பிக்கையுடன் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
- கொச்சியில் வைத்து படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் கடைசியான வெளியான 'டர்போ' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 'டர்போ' படத்தில் மம்மூட்டியுடன் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இதற்கிடையில் மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
கவுதம் மேனன் சொன்ன கதை பிடித்திருந்ததால் மம்மூட்டியே தனது தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி மூலம் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் படத்தில் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் அடுத்தப்படுத்து திரைப்பட வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சைலண்டாக கேரள மாநிலம் கொச்சியில் வைத்து படத்தின் பூஜையே நடந்து முடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படம் குறித்த அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகள் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.
- இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் தொடர்பு டைய இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசை அமலாக்கத்துறை குறைந்த பட்சம் 5 முறை விசாரித்து இருந்தது. குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.
சுதேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் விலை உயர்ந்த பரிசுகள், நகைகளை பெற்றதாகவும், அவர் குற்றவாளி என தெரிந்தே பழகினார் என்றும், இதற்கு பணத்தின் மீதான மோகமே காரணம் என்றும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.
இதை ஜாக்குலின் மறுத்து தான் நிரபராதி என்றும், சுகேஷின் குற்ற செயல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்ட சுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாக்குலின் பெர்ணான்டசிடம் ஏற்கனவே பல முறை விசாரணை நடத்தி இருந்தும் தற்போது மீண்டும் விசாரணை நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ‘தண்டேல்’ என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.
- மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. படத்தில் இவரது மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தனுசுடன் மாரி-2 மற்றும் தியா, என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தி மொழியில் தயாராகி வரும் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜூனனின் மகன் அபிமன்யூவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யூவை பற்றி நிறைய படித்துள்ளேன். அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாஸ்கோடகாமா படத்திற்கு அருன் எஸ்வி இசையமைத்துள்ளார்.
- இந்த படத்திற்கு ஏழுமலை ஆதிகேசவன் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நகுல் நடித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
எனினும், இடையில் சிலகாம் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நகுல் நடித்துள்ள புதிய படம் வாஸ்கோடகாமா என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது.
ஆர்ஜிகே இயக்கி இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக புது போஸ்டரும் வெளியிடப்பட்டு உள்ளது.
அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் போன்ற படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தற்போது ஆடியோ, டிரைலர் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ள நிலையில், படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்.
- இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். 3D தொழில் நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடத்தப்பட்டது. சூர்யாவின் கெரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகும் இந்த கங்குவா படமானது பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதன்படி சமீபத்தில் இந்த படமானது 2024 அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இதற்கிடையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 23 சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அதற்காக ட்ரைலர் வேலைகளையும் படக்குழு ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தை கூழாங்கல் திரைப்பட தயாரிப்பாளர் தயாரித்துள்ளார்.
- இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்த கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்து கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
- இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார்.
நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடுகளிலும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார்.
தக் லைஃப் படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பில் தன்னுடைய எஸ்டிஆர்48 படத்தில் சிம்பு இணையவுள்ளதாகவும் பிரம்மாணடமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் சிம்பு மலையாள இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் உடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடிப்பில் 2018 என்ற படத்தை இயக்கினார். இப்படம் குறைந்த பொருட் செலவில் எடுத்தாலும் உலகத்தரத்தில் எடுத்து இருப்பார்.
இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக சிம்பு நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து மோகன்லால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இவர்களுடன் மேலும் ஒரு பெரிய நடிகர் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
- சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இதனால் 18 வயதிற்கு மேற்ப்பட்டோர் மட்டுமே பார்க்கும் விதமாக திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க்.
- டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிராவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம்.
வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க். அனைவரும் சிறுவயதில் டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிரேவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம். இதை அனைத்தும் தயாரித்து அனைவரும் மகிழ்ச்சிக்கு வழிவகையாக இருந்தது கார்ட்டூன் நென்வொர்க் சேனல் ஆகும்.
ஆனால் நாளடைவில் இதற்கு போட்டியாக பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தன. ஆனாலும் கார்ட்டூன் நெட்வொர்க்கின் உச்சம் குறையவில்லை. 2021 ஆம் ஆண்டு கோவிட் வந்த போது பல நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் நடந்தது. ஆனால் கோவிட் காலத்தில் எந்த ஒரு நட்டமும் இல்லாமல் இயங்கியது இந்த அனிமேஷன் துறை மட்டுமே ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளிகளுக்கு பலியாகும் விதமாக பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பல பிரபல அனிமேஷன் ஸ்டூடியோக்களில் இருந்து பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பல டிசைனர்ஸ் ஒன்றிணைந்து ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் உங்களுக்கு பிடித்தமான கார்ட்டுன் நெட்வொர்க் சேனலின் பிடித்த ஷோவின் கிலிப்பை #ripcartoonnetwork என்று பதிவிடமாறு கூறியிருந்தனர்.
இதன் விளைவாக இந்த ஹேஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி , இன்று முழுவதும் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் மூடப்பட்டது என தவறான கண்ணோட்டத்தில் புரிந்துக்கொண்டனர்.