search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார்.
    • ஸ்ரீவாரி தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் படம் உருவாகிறது.

    இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்தார்.

    தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார். ஸ்ரீவாரி தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில் அதர்வாவுடன் அதிதி ஷங்கர் ஜோடி சேர்ந்துள்ளார்.

    இப்படத்திலும் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா திரைப்படத்திலும் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

    இந்நிலையில், இன்று அதிதி ஷங்கரின் பிறந்த நாள் முன்னிட்டு ஸ்ரீவாரி தயாரிப்பில் வெளியாகவுள்ள படத்தின் குழு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அதிதி ஷங்கருக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

    நடிகர் அதர்வா, பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    அதே சமயம் இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

    இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். 'டிஎன்ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே சமயம் இது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் படத்தைக் குறித்து அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஒருப்படத்திற்கு ஒரு இசையமைப்பாளர் இருப்பதுதான் வழக்கம் ஆனால் புதிதாக டி.என்.ஏ திரைப்படத்திற்கு 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

    சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் பாகம் 1 எடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
    • ந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்று கூறினாலே நமக்கு நியாபகத்திற்கு வரும் முதல் இயக்குனர் ஷங்கர் ஆவார். அவரின் கதையை நேர்த்தியாகவும் , மிக பிரம்மாண்டமாகவும் எடுக்கும் திறம் பெற்றவர். இவர் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.


    இந்தியன் பாகம் 1 எடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. உலகமெங்கும் பல நகரங்களில் படக்குழுவினர் சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியன் 2 ப்ரோமோஷனில் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள ஆடம்ஸ் மலையில் கடும் பனிகள் அடர்ந்த இடத்தில் போஸ்ட்ரை வைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திள்ளது படக்குழு. இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    • பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி.
    • ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி

    தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.

    இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலியை சாதாரண இயக்குனராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

    இதன் வெற்றியைக் கணக்கில் வைத்த ராஜமவுலி இனிமேல் குறைந்த பட்ஜெட்டில் கமர்சியல் கதைகளை இயக்கவே கூடாது என்கிற முடிவில் 3 ஆண்டுகள் கடின உழைப்பால் 2015-ம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன. இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.

    இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதனை, ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.

    இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும், திரைத்துறை வாழ்க்கை குறித்தும் பேச இருக்கிறது. பிரபல இயக்குனர்களான ஜேம்ஸ் காமரூன், ஜோ ரஸ்ஸோ மற்றும் கரன் ஜோஹர் இவரைப் பற்றி பேசியுள்ளனர்.

    ராஜமவுலியின் திரைத்துறை நண்பர்களான பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராணா தகுபதி மற்றும் ராம் சரண் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜமவுலி தற்பொழுது வெளியாகி கோடிகளை அள்ளும் கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

    மேலும் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு மாபெரும் படைப்பை அடுத்து இயக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
    • கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    பிரபல நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். கோவையை சேர்ந்த ரியல் வோர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர், டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.

    இந்நிறுவனம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், லியோ, விக்ரம் போன்ற திரைப்படங்களுக்கு பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த பிப்ரவரி மாதம் 20 -ம் தேதிக்குள் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டணமாக சிவபிரசாத் 68 இலட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன் 42 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

    மேலும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் சொன்ன பணிகளை முடிக்க முடியவில்லை.

    இதனிடையே சிவப்பிரசாத் கடந்த மாதம் நான்காம் தேதி கிராபிக்ஸ் காட்சிகளுக்கான கட்டணமாக 88 இலட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

    ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதும், குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காததும் தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில் தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆனால் சிவப்பிரசாத் தரப்பில் இதுக் குறித்து கூறுவது என்ன வென்றால் " பார்த்திபன் சார் பல கரெக்ஷன்களை வைத்துக் கொண்டே இருப்பார், நாங்கள் கொடுத்த காசுக்கு அதிகமாகதான் வேலை செய்துள்ளோம். சொன்ன காட்சிகளை விட அதிகமாக வேலை இருந்ததால் சொன்ன அமவுண்டை விட அதிகமாக கேட்டோம். பணத்தை பற்றி கேட்டதற்கு பணிகளை முடித்தவுடன் மொத்தமாக வாங்கிக் கொள்ளுமாரு  கூறினார். ஆனால் நாங்கள் நம்பிகைகளின் அடிப்படையில் சில காட்சிகளை தவிர்த்து 400-க்கும் மேற்பட்ட கிராபிக் காட்சிகளை அப்படத்தில்  செய்து கொடுத்துள்ளோம், அவர்கள் அந்த காட்சிகளை வைத்துதான் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்," எனவும் இதனால் அவர் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று வழக்கை சிவப்பிரசாத் தொடர்ந்துள்ளார்.

    ஆனால் படக்குழு இன்னும் 6 நாட்களில் படம் வெளியாகும் என ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். படத்தின் அடுத்த பாடலான இக்கி பிக்கி பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். இதனால் ஒரு போட்டா போட்டி சூழல் நடைப்பெற்று வருகிறது. இதனால் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா.
    • ராஷ்மிகா மந்தன்னாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியிடப்பட்டது.

    தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து நாகர்ஜூனாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியாகியது. படப்பிடிப்பு ஐதராபாத், மும்பை மற்றும் பல இடங்களில் நடைப்பெற்ற வருகிறது. நேற்று ராஷ்மிகா மந்தன்னாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியிடப்பட்டது.

    அந்த வீடியோவில் ராஷ்மிகா ஓர் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பெட்டியை தோண்டி வெளியே எடுக்கிறாள். அப்பெட்டி முழுவதும் பணம் நிறைந்து கிடக்கிறது. அவள் அந்த பெட்டியை திறந்து சரிபார்த்து விட்டு , சந்தோஷத்துடன் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறார்.

    நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கதாப்பாத்திரங்கள் பணத்தை சார்ந்து இருக்கிறது. ஆனால் தனுஷின் கதாப்பாத்திரமோ ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் உள்ளது. எம்மாதிரி கதைக்களத்துடன் திரைப்படம் அமைந்துள்ளது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    ஜெயம் ரவி அதற்கடுத்து பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள்  நடைப்பெற்று வருகிறது.

     பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.

    படத்தின் டிஜிட்டல் மட்டும் சாட்டிலைட் உரிமையை 37 கோடி ரூபாய் கொடுத்து ஜீ தமிழ் மற்றும் ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது. அதை வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
    • ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிபில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

     அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.

     

    இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, வணங்கான் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

    • இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார்.

    நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் பாய் நெக்ஸ்ட் டோர் கதாப்பாத்திரமாக மக்கள் மனதை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.

    சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் நினைத்தது போல் மக்களிடம் வரவேற்பு இல்லை, சமீபத்தில் அவர் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.

    சமீபத்தில் அவர் நடிகை அதிதி ராவுடன் நிச்சயம் செய்தார். சித்தார்த் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்குகிறார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான தமாதமா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் யாசின் நிசார், குரு ஹரிராஜ் இணைந்து பாடியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு நொடி' படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார்.
    • கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார்.

     இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் 'பார்க்' என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது.

    இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார் .இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர். அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் E.நடராஜ் பார்க் படத்தைத் தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகனாக சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஒரு நொடி' படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார். பிரதான வில்லனாக யோகிராம் நடித்துள்ளார்.கதாநாயகியின் தந்தையாகத் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ் நடித்துள்ளார்.இவர்களைத் தவிர காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடந்துள்ளது.

    படம் பற்றி இயக்குநர் ஈ.கே. முருகன் பேசும்போது,

    "இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த திரில்லர் என்ற வகையில் உருவாகியுள்ளது.

    இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூறிய போது நான் சொன்னேன். படத்தின் முதல் பாதி வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்; இரண்டாவது பாதி இதயம் வலிக்கப் பயமுறுத்தும் என்றேன்.அதன்படி கதையையும் சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது.சரியாகத் திட்டமிட்டு 36 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, படத்தை நிறைவு செய்திருக்கிறோம்.

    அண்மையில் வெற்றி பெற்ற ஒரு நொடி படத்தில் நடித்துள்ள தமன்குமார் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் .அதேபோல் சமீபத்தில் வெளிவந்த லாந்தர் படத்தில் நாயகியாக நடித்த ஸ்வேதா டோரத்தி நாயகியாக நடித்துள்ளார்.அதேபோல் அண்மை வெற்றிப் படமான கருடன் படத்தில் வில்லனாக நடித்த யோகிராம் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

    ஹாரர் படங்களுக்கு என்றும் வரவேற்பு இருக்கும். முதலீடு செய்யும் தயாரிப்பாளரையும் காப்பாற்றி விடும்.எனவே இந்த வகைப் படத்தை எடுக்கத் தீர்மானித்து முடித்தோம்.

    இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். ஆகஸ்டில் இப்படத்தை வெளியிடுவதாகத் திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப்.
    • புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பஹீரா.

    இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    தொடர்ந்து, சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரபல மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்திற்கு ஜாலியோ ஜிம்கானா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

    புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டிசீரிஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும், படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அதிரட்டும் டும் டும் டும் என்கிற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் பிரபுதேவா மற்றும் வேதிகா குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ பாடல் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் திரையில் வெளியாகவுள்ளது.
    • படத்தின் முதல் பாடலும் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ராம் மிக முக்கியமானவர். இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு வாழ்க்கையின் தீஸிஸ் என்று சொல்லலாம். சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படங்களை இயக்குவார்.

    2018 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி மற்றும் சாதனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பேரன்பு. அதைத்தொடர்ந்து தற்பொழுது ஏழு கடல் ஏழு மழை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வென்றும், சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்காக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

    படத்தின் முதல் பாடலும் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. தற்பொழுது படத்தின் இரண்டாம் பாடலான ஏழேழு மழை பாடல் வெளியாகியுள்ளது.

    இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். யுவனின் இசையில் சந்தோஷ் பாடுவது இதுவே முதல்முறை. இந்த பாடலிற்கு மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×