என் மலர்
சினிமா செய்திகள்
`Miss You' படத்தின் முதல் பாடல் வெளியானது
- இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார்.
நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் பாய் நெக்ஸ்ட் டோர் கதாப்பாத்திரமாக மக்கள் மனதை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.
சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் நினைத்தது போல் மக்களிடம் வரவேற்பு இல்லை, சமீபத்தில் அவர் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.
சமீபத்தில் அவர் நடிகை அதிதி ராவுடன் நிச்சயம் செய்தார். சித்தார்த் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்குகிறார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான தமாதமா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் யாசின் நிசார், குரு ஹரிராஜ் இணைந்து பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.