search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • பிரியா ஆனந்த் நடித்து வரும் 'அந்தகன்' படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.
    • பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். 'வாமனன்' படம் மூலம் தமிழிலும், 'லீடர்' படம் மூலம் தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.

    இதேபோல், பாலிவுட் திரைப்படமான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    தற்போது, 'அந்தகன்' படத்தில் நடித்து வரும் பிரியா ஆனந்த், பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.

    நடிகை பிரியா ஆனந்த் சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    விஐபி சாமி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்த பிரியா ஆனந்திற்கு ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்களுடன் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    பின்னர், கோவிலில் இருந்து வெளியேறிய பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா.ரஞ்சித்.
    • இப்படத்திற்கு 'பாட்டல் ராதா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா.ரஞ்சித். அதைத்தொடர்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார்.

    ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.

    இயக்குநராக மட்டுமின்றி நீலம் என்று அமைப்பைத் தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே - பேபி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இடையில் நீலம் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் பேசுபொருளாக மாறியது.

    இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்படத்திற்கு 'பாட்டல் ராதா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசை நாளை வெளியாகவுள்ளது.

    இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

    இப்படம் மகிழ்ச்சி, மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டாராக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் கடந்த மாதம் 16 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஓடிடி- யில் வெளியாகியது.

    சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தில் பிரித்விராஜ் அவரது அசத்தலான நடிப்பின் மூலம் அனைவரையும் கட்டிப் போட்டார். ப்ளெசி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

    அதைத் தொடர்ந்து அதற்கு நேர்மாறாக குருவாயூர் அம்பலநடையில் என்ற காமெடி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கடந்த மாதம் 16 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகளவில் 90 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து பேசில் ஜோசப், நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், சிஜு சன்னி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி திரைப்படமாக அமைந்துள்ள இப்படத்தில் டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது.

    கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஓடிடி- யில் வெளியாகி மக்கள் அனைவரும் பார்த்து விட்டு சமூக வலைத்தலங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இப்படம் ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

    உங்களுக்கு காமெடி திரைப்படம் பிடிக்கும் என்றால் இப்படம் கண்டிப்பாக உங்களுக்குதான். இதுவரை இப்படி ஒரு கதைக்களம் தமிழ் சினிமாவில் வரவில்லை. படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் பிரியாவிடம் உதவி இயக்குனராகப் பணிப்புரிந்தவர் ராகவ் மிர்தாத்.
    • காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.

    இயக்குனர் பிரியாவிடம் உதவி இயக்குனராகப் பணிப்புரிந்தவர் ராகவ் மிர்தாத். அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த "சைஸ் ஸீரோ" தேசிய விருதுபெற்ற "பாரம் " ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ராகவ் மிர்தாத். பிரசாத் ஸ்டுடியோவின் கிராஃபிக்ஸ் பிரிவில் ஐம்பதுக்கும் அதிகமான படங்களுக்கு விசுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசராக பணிபுரிந்தவர்.

    அதைத்தொடர்ந்து காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார். இப்படத்தில் மாத்யூ வர்கீஸ், சவுந்தர்யா, சுவாமினாதன் மற்றும் அஞ்சலி நாயர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தற்பொழுது அவர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராகவ் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு `பன் பட்டர் ஜாம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கௌஷிக் ராம், அஞ்சலி நாயர் நடித்திருக்கும் படம் இது. திரைப்படங்களில் வருவதுபோன்ற காதல் வாழ்க்கையை விரும்பும் இளைஞன், உண்மையான காதலை எப்படிப் புரிந்துகொள்கிறான் என்பதுதான் கதை. குறைந்த செலவில் புதுமுக நடிகர்களை வைத்து ஓரளவுக்கு சிறப்பாகவே எடுத்திருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.

    இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

    இந்நிலையில் இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீ போல பரவின.

    அண்மையில், விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது என்று நடிகர் அர்ஜுன் அப்டேட் கொடுத்தார்,

    இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்துள்ளார்.

    தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அஜித் கருப்பு நிற கூலர்ஸுடன் . பிளாக் அன் பிளாக் ஜெர்கின் போட்ட டிரெஸ்ஸில் ஒரு தனி சாலையில் பாலைவனம் அருகில் கையில் ஒரு பையுடன் நடந்து வருமாறு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் தலைப்பிற்கு கீழ் திருவினையாக்கும் என பதிவிட்டுள்ளனர்.

    இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
    • வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

    எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தனெக்கென ஒரு பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை சில நடிகர்களுக்குதான் உண்டு. அதேப் போல் தமிழ் சினிமாவின் வெர்சாடைல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

    சமீப காலமாக இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் திரைப்படம் பெரும்பாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இவர் மற்றப் படங்களில் வில்லனாகவோ ,மற்ற கதாப்பாத்திரத்தில் நடித்தால் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும்.

    ஆனால் இந்த கருத்தை உடைக்கும் வகையில் இவரது 50 வது திரைப்படம் அமைந்தது. சமீபத்தில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

    விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவர் ஏன் ரொமாண்டிக் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விஜய் சேதுபதி " தரமாட்டேங்குறாங்க சார், ஆனா நான் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன். நானும் அதுக்கான கதைய தேடிட்டு தான் இருக்கேன், காதல்ல என்னைக்குமே தீர்ந்தே போகாது சார், காதல் காட்சிகள் ரொம்ப ரசிக்கிறவன் சார் நான் , கேமரா முன்னாடி நடந்தாலும் சில நொடிகளே நடந்தாலும், நான் அதை நிஜம் என்று நம்புகிறேன்., அது எல்லாதுக்கும் அமைந்துடாதுள்ள சார்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . 28 வருடங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன்
    • அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

    நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். 28 வருடங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.அதை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் படக்குழுவினர் மலேஷியாவில் ப்ரோமோஷன் விழாவில் கலந்துக் கொண்டனர்.

    அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி மிகவும் வைரலாகியது. படத்தில் கமல்ஹாசன் 7 கெட்டப்பில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஜே சூர்யா இரண்டாம் பாகத்தில் சில காட்சியில் வரப்போவதாகவும்  மூன்றாம் பகுதியில் நிறைய காட்சிகளில் வருவேன் என்று ப்ரோமோஷன் விழாவில் கூறினார்.

    படத்தின் பாடலான கால்ண்டர் பாடலின் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழிவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது.
    • மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

    சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் நேற்று வரை 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது வந்த தகவல் படி இதுவரை திரைப்படம் 415 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளனர்.

    முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
    • இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    இந்தி திரை உலகில் பிரபல நடிகரான அமிதாபச்சன் பேரன் அகஸ்தியா நந்தாவும், ஷாருக்கான் மகள் சுகானா காணும் நெருங்கிய நண்பர்கள்.

    இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஏற்கனவே இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

    இந்நிலையில் இவர்களின் நண்பர் வேதாந்மகாஜன் பிறந்தநாள் லண்டனில் நடந்தது. இதையொட்டி நடந்த இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    அவர்களுடன் அஜய் தேவ்கான், கஜோல் தம்பதியரின் மகள் நைசாவும் பங்கேற்று உள்ளார். இரவு விருந்து முடிந்து சுகானா காணும், அகஸ்தியா நந்தாவும் ஒரே காரில் திரும்பி சென்றனர்.

    இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் லண்டன் விருந்தில் பங்கேற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின.
    • கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

    நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் கூட்டணியில் பிரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் X. விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

    ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் கவுதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

     

    இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆர்யாவின் காட்சிகள் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இடையில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது.

     

     

    இந்த நிலையில்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைத்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் என இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு அடுதடுத்து சுவாரஸ்யமான விஷயங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     

    மேலும், இன்று அதிகாலை அவர் நடத்தி வரும் பிளாகில் எழுதி பதிவிட்ட அவர், இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, அவரது பதிவில், 'ஒருவழியாக உற்சாகமும், அச்சமும் நிறைந்த இந்த போட்டி நிறைவடைத்துவிட்டது. இந்த போட்டியை நான் டிவியில் பார்க்கவில்லை. நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

     

    இதோபோல எக்ஸ் தளத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தான் போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவித்திடும் என்பதால் நான் போட்டியை பார்க்காமல் தியாகம் செய்தேன் நான் என்ன செய்யட்டும் சுந்தர் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, போட்டியை பார்க்காததற்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும்.
    • எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன.

    பிரபல இந்தி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இவர் ஆலியா என்பவரை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் நவாசுதீன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஆலியாவும், தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக ஆலியா மீது நவாசுதீனும் மாறி மாறி புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.

    பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த மார்ச் மாதம் நவாசுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் மனக்கசப்புகளை மறந்து ஒன்றாக இணைந்தனர். 'குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம்' என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்தநிலையில் 'திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும்' என்று நடிகர் நவாசுதீன் கூறியுள்ளார்.

    அவர் மேலும் கூறும்போது, "திருமணத்திற்கு பிறகு இருவரிடையே இருக்கும் நேசம் குறைய தொடங்குகிறது. எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் யாரையாவது காதலித்தாலோ, தொடர்ந்து காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×