search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இயக்குனர் வசந்த குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த மௌனகுரு திரைப்படம் பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியது.
    • கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.

    கடந்த 2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'வம்சம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால்பதித்தவர் நடிகர் அருள்நிதி. தொடர்ந்து இயக்குனர் வசந்த குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த மௌனகுரு திரைப்படம் பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியது.

     

    தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதியின் நடிப்பில் ஹாரர் படமான டிமான்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவனம், தகராறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கே- 13 உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.

    இந்நிலையில் அருள்நிதி புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான என்னங்க சார் உங்க சட்டம் என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளாராம்.

     

    இந்த திரைப்படத்தையும் பேஷன் ஸ்டுடியோஸ் இயக்கவுள்ளது. இந்த புதிய படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதிய பிரச்னைகளைக் குறித்து என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் பிரபு ஜெயராம் பேசியிருந்தைப்போல இதுவும் ஒரு சமூக படமாக இருக்குமோ என்ற யூகங்களும் எழத்தொடங்கியுள்ளன .

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
    • டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார்.

    பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோத்தரர் நகுல் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.

     

    இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னணி பாடகராகவும் உள்ள நகுல் இடையில் சூப்பர் சிங்கர் 7 நிகச்சியில் சிற்ப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.

    தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா'  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

    அதன்படி 'வாஸ்கோடகாமா' படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.

    அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படம் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.

    'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் வரவேற்பை பெற்றநிலையில், இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.
    • எளிய முறையில் நடந்துள்ள திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை மீரா நந்தன். சீரியல் நடிகையாக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் மலையாளத்தில் 2007-ம் ஆண்டு ஒளிபரப்பான 'வீடு' என்கிற தொடரில் தான் முதன் முதலாக அறிமுகமானார். இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு மலையாள படமான 'முல்லா' படத்தில் நடித்தார்.

    பின்னர், 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'வால்மீகி' திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் ஆதியுடன் இணைந்து 'அய்யனார்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த மீரா நந்தன் கடந்த ஆண்டு வெளிவந்த 'ஜெஸ்னா' எனும் படத்தில் நடித்திருந்தார்.


    இந்நிலையில், நடிகை மீரா நந்தனுக்கும் அவரின் காதலரான பியூ ஸ்ரீஜு என்பவருக்கும் இன்று காலை குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

    எளிய முறையில் நடந்துள்ள திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் மீரா நந்தனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண்.
    • இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண்.

    இவர் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார். இப்படத்தை 'எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்' தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில் இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளை ஒட்டி, அவர் நடித்து வரும் 'டீசல்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் இத்திரைப்படம் இந்தாண்டு ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.
    • ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

    மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடல், ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஆஷா போஸ்லேவின் கிரக்கும் குரலுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்நிலையில் தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை மும்பையில் வைத்து நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜாக்கி செராப் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை முத்தமிட்டு தண்ணீரால் கழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீரால் ஆஷாவின் கால்களைக் கழுவித் துடைத்த சோனு நிகாம் பின் எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சோனு நிகாம் தமிழில் அஜித்தின் கிரீடம் படத்தில் இடம்பெற்ற விழியினில் உன் விழியினில், ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ஆருயிரே, கார்த்தியின் சகுனி படத்தில் இடம்பெற்ற மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடுயுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
    • இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்துள்ளார்.

    பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019- ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 'மகான்' படத்தில் தந்தையுடன் நடித்தார். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

    இந்நிலையில் துருவ்விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைந்து பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்துள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

    இந்நிலையில், இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் மாறி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
    • வெங்கல் ராவுக்கு சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரமும் என உதவி வழங்கினர்.

    தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

    நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வெங்கல் ராவ். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.

    ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்க்குள்ளாகினர்.

    இதையடுத்து, வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோவை பார்த்த சிம்பு, தனது உதவியாளரை நேரில் அனுப்பி ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார். உதவி பெற்றுக்கொண்ட வெங்கல் ராவ் நடிகர் சிம்புவுக்கு நன்றியை தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரமும் என உதவி வழங்கினர்.

    இந்நிலையில், நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு வழங்கியுள்ளார். வெங்கல் ராவை போனில் தொடர்பு கொண்டு பேசிய வடிவேலு அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக, வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யமாட்டார் என பலரும் அவரை விமர்சித்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெங்கல் ராவுக்கு அவர் உதவி செய்துள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணிகள் நடக்கிறது.
    • 2 மாதங்களில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    விஜய்யின் 'கில்லி' படம் சமீபத்தில் மீண்டும் திரைக்கு வந்து புதிதாக ரிலீசான பல படங்களின் வசூலை முறியடித்தது.

    வசூல் சாதனை நிகழ்த்தியதால் அவர் நடித்துள்ள 'பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை' போன்ற வெற்றி படங்கள் மீண்டும் ரிலீசாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் 'பூவே உனக்காக' படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணிகள் நடக்கிறது. இரண்டு மாதங்களில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

    'பூவே உனக்காக' படம் 1996-ல் வெளியானது. இதில் விஜய்யுடன் சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார் ஜெய்கணேஷ், மதன்பாப் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். விக்ரமன் இயக்கி இருந்தார்.

    படத்தில் இடம்பெற்ற ஆனந்தம் ஆனந்தம், சொல்லாமலே போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜான்வி கபூருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம்.
    • ‘கர்ணா’ படத்திலும் நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.

    இவரது தந்தை போனி கபூர் தமிழில் அஜித்குமார் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். ஜான்வி கபூருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம். இதற்காக கதை கேட்டு வந்தார்.

    இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' தெலுங்கு படத்திலும், சூர்யா நாயகனாக நடிக்க தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராவதாக அறிவிக்கப்பட்ட 'கர்ணா' படத்திலும் நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    'தேவாரா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். 'கர்ணா' படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த படத்தை கைவிட படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் ஜான்வி கபூருக்கு தமிழ் படத்தில் அறிமுகமாக இருந்த வாய்ப்பு கைநழுவி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
    • வெப் தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள். சமந்தாவும் பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

    தற்போது இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கிறார். ராஜ், டி.கே ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    இந்த தொடருக்காக நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு முன்பே கதாபாத்திரங்களை மெருகேற்ற நடிப்பு பயிற்சி எடுக்க உள்ளனர்.

    இயக்குனர்கள் ராஜ், டி.கே ஆகியோர் தற்போது பேமிலி மேன் 3-ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அது முடிந்ததும் ஆகஸ்டு மாதம் சமந்தா, ஆதித்ய ராய் கபூர் நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • நடிகை நயன்தாரா இவ்விழாவில் கலந்துக் கொண்டார்.

    2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

    அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார்.

    அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் இன்று சென்னையில் நடந்தது.

    படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். நடிகை நயன்தாரா இவ்விழாவில் கலந்துக் கொண்டார். நயன் தாரா படத்தின் நாயகனான ஆகாஷ் முரளியை அறிமுகம் செய்தார். விழாவில் பேசிய நயன் தாரா " நான் எந்த விழாவிலும் கலந்துக் கொள்ள விருப்பப்படுவதில்லை, ஆனால் இந்த விழாவிற்கு கலந்துக் கொள்ள காரணம் உண்டு. இந்த விழா எனக்கு ஒரு குடும்ப விழா போன்றது. அதற்கு காரணம் என்னுடைய இயக்குனர் விஷ்ணுவர்தன் தான். அவரை எனக்கு 15 வருடங்களாக தெரியும் , ஒரு சிறந்த மனிதன்" என கூறினார்.

    இப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    ×