என் மலர்
- சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.
- குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார்.
விடாமுயற்சி படத்தைத் தாண்டி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.
குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்பட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் 2-வது லுக் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். குட் பேட் அக்லி படம் 2025-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- கருப்பு மீசை வெள்ளை தாடியுடன் வித்தியாசமான லுக்கில் ரஜினிகாந்த் உள்ளார்.
- அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் 171 ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரல் ஆனது.
அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு "கூலி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் கதை தங்க கடத்தல் சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கூலி படத்திற்கான ரஜினிகாந்தின் லுக் டெஸ்ட் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு மீசை வெள்ளை தாடியுடன் வித்தியாசமான லுக்கில் ரஜினிகாந்த் உள்ளார்.
அதோடு "கூலி" படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
Look test for #Coolie ?
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 26, 2024
On floors from July pic.twitter.com/ENcvEx2BDj
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஐதராபாத் விமான நிலையம் வந்துள்ளனர்.
- ஏர்போர்ட்டில் பணியாற்றும் ஒரு முதியவர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் தயாரிப்பாளரான ஸ்ரீ வெங்கடேஷ்வர சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது அதில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இடையிலான சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஐதராபாத் விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது நாகர்ஜுனா நடந்து வருகையில் ஏர்போர்ட்டில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி நபர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.
ஆனால் நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை நாகர்ஜூனாவை நெருங்க விடாமல் பிடித்து தள்ளி விடுகிறார். அதில் அந்த மாற்றுத்திறனாளி நபர் நிலை தடுமாறி விழப்போக பின் தட்டு தடுமாறி அவர் விழாமல் நிற்கிறார். இதை நடிகர் நாகர்ஜுனா பார்த்தும் பார்க்காததுப் போல் கடந்து போகிறார். அவருக்கு பின் வந்த தனுஷ் இவரையும் அந்த ஊழியரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு கடந்து செல்கிறார்.
இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த பதிவை பார்த்து விட்டு நாகர்ஜுனா செய்தது மிகப்பெரிய தவறு, மனிதாபமற்ற செயல், இதற்கு அவர் கண்டிப்பாக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என கமெண்ட்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதையடுத்து, நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் விமான நிலைய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில் அவர், இந்த விவகாரம் இப்போது தான் என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன், என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரை விமான நிலையத்தில் நாகார்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரசிகரை கட்டியணைத்த நாகர்ஜுனா, தனது பாதுகாவலர் அவரை தள்ளிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
- இயக்குநர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்கு ராஜா'. இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குநர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் தேசிங்குராஜா -2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து உருவாகும் இந்த படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிராக் பஸ்வான் 2011 ஆம் ஆண்டு மைலே நா மைலே ஹம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
- அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கங்கனா நடித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானும் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தும் சாந்தி கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
13 வருடங்களுக்கு முன்பு ஒரே திரைப்படத்தில் கதாநாயகன் நாயகியாக நடித்த இருவர் தற்போது எம்.பி.யாக பதிவேற்று பாராளுமன்றத்தில் சந்தித்து கொண்டுள்ளனர்.
பீகாரின் மூத்த அரசியல்வாதியான ராம் விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான் 2011 ஆம் ஆண்டு மைலே நா மைலே ஹம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கங்கனா நடித்திருந்தார்.
அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் சினிமாத்துறையில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக சிராக் பஸ்வான் மாறினார்.
தற்போது ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்,பி.யான சிராக் பஸ்வான், உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற கங்கனா எம்.பி.யாக பதவியேற்றுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் 2 திரைப்படம் இந்தியில் இந்துஸ்தான் 2 என வெளியாக இருக்கிறது.
- டிரைலர் வெளியீட்டு விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இந்தியன் 2 திரைப்படம் இந்தியில் இந்துஸ்தான் 2 என வெளியாக இருக்கிறது.
இதுதொடர்பான டிரைலர் வெளியீட்டு விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது.
அப்போது, ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடித்தபோது அவர் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்ததை நினைவுக்கூர்ந்த கமல்ஹாசன் நன்றிகளையும் தெரிவித்தார்.
"ஹே ராம்" திரைப்படம் கமல் எழுதி, இயக்கி, தயாரித்து கடந்த 2000ம் ஆண்டில் தமிழ், இந்தி என இருமொழி படமாக வெளியானது. இதில் கமல்ஹாசனும் ஷாருக்கானும் நண்பர்களான சாகேத் ராம் மற்றும் அம்ஜத் அலி கானாக நடித்தனர்.
டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் மேலும் கூறியதாவது:-
ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடித்தபோது அவர் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்தார்.
நாங்கள் ஒன்றாக வேலை செய்யும் போது, நாம் அனைவரும் வெறும் மனிதர்கள். நான் ஒரு சூப்பர் ஸ்டாரைப் பார்க்கவில்லை. அவர் ஒரு சூப்பர் இயக்குநரைப் பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள், ஷாருக் சாஹிப் அந்தப் படத்தை இலவசமாகத் தயாரித்தார். அதை எந்த சூப்பர் ஸ்டாராலும் செய்ய முடியாது.
அது ஒரு ரசிகரால் மட்டுமே முடியும். கலையின் ஆர்வலர் மற்றும் நல்ல நடிகர். அவருக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஐதராபாத் விமான நிலையம் வந்துள்ளனர்.
- ஏர்போர்ட்டில் பணியாற்றும் ஒரு முதியவர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் தயாரிப்பாளரான ஸ்ரீ வெங்கடேஷ்வர சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது அதில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இடையிலான சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஐதராபாத் விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது நாகர்ஜுனா நடந்து வருகையில் ஏர்போர்ட்டில் பணியாற்றும் ஒரு முதியவர் நாகர்ஜுனாவை காண அவரை நெருங்குகிறார்.
ஆனால் நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை நாகர்ஜூனாவை நெருங்க விடாமல் பிடித்து தள்ளி விடுகிறார். அதில் அந்த முதியவர் நிலை தடுமாறி விழப்போக பின் தட்டு தடுமாறி அவர் விழாமல் நிற்கிறார். இதை நடிகர் நாகர்ஜுனா பார்த்தும் பார்க்காததுப் போல் கடந்து போகிறார். அவருக்கு பின் வந்த தனுஷ் இவரையும் அந்த ஊழியரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு கடந்து செல்கிறார்.
இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த பதிவை பார்த்து விட்டு நாகர்ஜுனா செய்தது மிகப்பெரிய தவறு, மனிதாபமற்ற செயல், இதற்கு அவர் கண்டிப்பாக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என கமெண்ட்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதையடுத்து, நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் விமான நிலைய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில் அவர், இந்த விவகாரம் இப்போது தான் என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடந்து முடிந்து 2 நாட்கள் ஆவதற்குள் இதே போல இன்னொரு சம்பவமும் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குபேரா படப்பிடிப்பிற்காக தனுஷ் ஜுஹோ கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு ரசிகர் தனுஷை வீடியோ எடுக்க தனுஷின் பாதுகாவலர் அந்த நபரை தள்ளி விடுகிறார்.
நாகர்ஜூனாவை நெருங்கிய ரசிகரை அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்டதை வேடிக்கை பார்த்த தனுஷ் இம்முறை தனது ரசிகரை அவரது பாதுகாவலர் தள்ளிவிட்டதை கண்டுக்காமல் சென்று விட்டார். தனுஷின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
- சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்க்குள்ளாகினர்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வெங்கல் ராவ். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.
ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்க்குள்ளாகினர்.
இந்த நிலையில், நடிகர் சிம்பு, வெங்கல் ராவுக்கு ரூ.2 லட்சம் உதவி வழங்கியுள்ளார். வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோவை பார்த்த சிம்பு, தனது உதவியாளரை நேரில் அனுப்பி ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார். உதவி பெற்றுக்கொண்ட வெங்கல் ராவ் நடிகர் சிம்புவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.
- களத்தில் வைத்து வேகமாக ஓட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் துபாய் பந்தயகளத்தில் கார் ஓட்டிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. வீடியோவில் கார்களை உற்று நோக்கும் அஜித், பிறகு அதனை களத்தில் வைத்து வேகமாக ஓட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதலில் பி.எம்.டபிள்யூ. காரை ஓட்டி மகிழ்ந்த அஜித்குமார் அடுத்ததாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பி.எம்.டபிள்யூ. காரில் பந்தய களத்தை வலம்வந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார்.
- மணிரத்னத்துடன் 34 ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' என்ற ஆக்ஷன் படத்தில் கமல்ஹாசன் மீண்டும் இணைந்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் 'தக் லைஃப்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார்.
கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார்.கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34-ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.
இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. இதையடுத்து 3-ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது.
சிம்பு இப்படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட விரைவில் முடிவடையும் என்று தெரிய வந்துள்ளது. சிலம்பரசன் டிஆர் படத்தின் கடைசி ஷெட்யூலில் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மீண்டும் சிம்பு எஸ்டிஆர் 48-ல் கவனம் செலுத்துவார். சிம்புவின் 50-வது படத்தை சுதா கொங்கரா இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புது மணப்பெண் போல் வந்த தாயை மகள்களே அழைத்து வந்தனர்.
- எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளேன்.
மலையாள காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டி. இவருக்கும், கொச்சியை சேர்ந்த அனுஜா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. அவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறி அனுஜாவை கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதா, வைகா என 2 மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் தர்மஜன் போல்காட்டி மனைவி அனுஜாவுடன் கொச்சி அருகே கொங்கேர்பள்ளி மகாதேவர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் காமெடி நடிகர்-அனுஜா முறைப்படி திருமணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் மகள்கள் வைகா, வேதா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புது மணப்பெண் போல் வந்த தாயை மகள்களே அழைத்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கொங்கையர் பள்ளி பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். அதற்கு சாட்சியாக சினிமா தயாரிப்பாளரான என்.எம்.பாதுஷாவின் மனைவி மஞ்சு, நண்பர்களான கொங்கேர்பள்ளியை சேர்ந்த பிஜு, ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து தர்மஜன் போல்காட்டி கூறும்போது, 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. அதனை முறைப்படுத்துவதற்காக குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் திருமணம் செய்து உள்ளேன். எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளேன். இதை காண்பதற்கு எனது தந்தை, தாய் மற்றும் அனுஜாவின் தந்தை இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் தற்பொழுது 85 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை வசூலில் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். அவர் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். நல்ல கதையுடைய திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல திரைப்படத்தை பார்த்தால் அப்படக்குழுவினரை நேரில் அழைத்தோ, தொலைப்பேசியில் அழைத்தோ பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் மற்றும் தயாரிப்பாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.