என் மலர்
- விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.
- களத்தில் வைத்து வேகமாக ஓட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் துபாய் பந்தயகளத்தில் கார் ஓட்டிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. வீடியோவில் கார்களை உற்று நோக்கும் அஜித், பிறகு அதனை களத்தில் வைத்து வேகமாக ஓட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதலில் பி.எம்.டபிள்யூ. காரை ஓட்டி மகிழ்ந்த அஜித்குமார் அடுத்ததாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பி.எம்.டபிள்யூ. காரில் பந்தய களத்தை வலம்வந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார்.
- மணிரத்னத்துடன் 34 ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' என்ற ஆக்ஷன் படத்தில் கமல்ஹாசன் மீண்டும் இணைந்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் 'தக் லைஃப்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார்.
கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார்.கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34-ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.
இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. இதையடுத்து 3-ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது.
சிம்பு இப்படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட விரைவில் முடிவடையும் என்று தெரிய வந்துள்ளது. சிலம்பரசன் டிஆர் படத்தின் கடைசி ஷெட்யூலில் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மீண்டும் சிம்பு எஸ்டிஆர் 48-ல் கவனம் செலுத்துவார். சிம்புவின் 50-வது படத்தை சுதா கொங்கரா இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புது மணப்பெண் போல் வந்த தாயை மகள்களே அழைத்து வந்தனர்.
- எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளேன்.
மலையாள காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டி. இவருக்கும், கொச்சியை சேர்ந்த அனுஜா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. அவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறி அனுஜாவை கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதா, வைகா என 2 மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் தர்மஜன் போல்காட்டி மனைவி அனுஜாவுடன் கொச்சி அருகே கொங்கேர்பள்ளி மகாதேவர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் காமெடி நடிகர்-அனுஜா முறைப்படி திருமணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் மகள்கள் வைகா, வேதா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புது மணப்பெண் போல் வந்த தாயை மகள்களே அழைத்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கொங்கையர் பள்ளி பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். அதற்கு சாட்சியாக சினிமா தயாரிப்பாளரான என்.எம்.பாதுஷாவின் மனைவி மஞ்சு, நண்பர்களான கொங்கேர்பள்ளியை சேர்ந்த பிஜு, ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து தர்மஜன் போல்காட்டி கூறும்போது, 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. அதனை முறைப்படுத்துவதற்காக குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் திருமணம் செய்து உள்ளேன். எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளேன். இதை காண்பதற்கு எனது தந்தை, தாய் மற்றும் அனுஜாவின் தந்தை இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் தற்பொழுது 85 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை வசூலில் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். அவர் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். நல்ல கதையுடைய திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல திரைப்படத்தை பார்த்தால் அப்படக்குழுவினரை நேரில் அழைத்தோ, தொலைப்பேசியில் அழைத்தோ பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் மற்றும் தயாரிப்பாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
- அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்தார்.
தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதிதி நடிக்கும் அடுத்தப் படத்தில் தனெக்கென குரல் பாணியிலும் நடிப்பிலும் அசத்தும் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் இசை நிறைந்த காதல் கதை பின்னணியில் உருவாகவுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இசையை பிரபல மலையாள இசையமைப்பாளரான ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரனவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஹிருதயம் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிதி சங்கர் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்து இப்படத்திலும் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் `ரசவாதி` திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2021 ஆம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார்.
- தயாரிப்பாளர் அவரது எக்ஸ் பக்கத்தில் டைட்டில் ரிவீலிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
2003 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, நமிதா, ரகுமான், பிரபு, ஆதித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.
2021 ஆம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். அதுக்குறித்து தயாரிப்பாளர் அவரது எக்ஸ் பக்கத்தில் டைட்டில் ரிவீலிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் விதியால் சவால் செய்யப்பட்ட காதல் பயணம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இது ஒரு ஃபீல் குட் காதல் கதைக்களத்துடன் இருக்கும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்களில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2.
- படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகவுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். 28 வருடங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
அதை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதற்காக படக்குழுவினர் மும்பை ட்ரைலர் லான்ச் ஈவண்டில் கலந்துக் கொள்வதற்காக சென்றனர்.
படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகவுள்ளது. டிரைலர் காட்சிகளில் கமல்ஹாசன் மாறுபட்ட இந்தியன் தாத்தாவாக காட்சியளிக்கிறார். மிகவும் அதிரடி ஆக்ஷன் நிறந்த சண்டை காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன் இப்படத்தில் வித்தியாசமான பல கெட்டப்புகளில் வருகிறார். `நீங்க காந்தி வழியில் போராடுங்க நான் நேதாஜி வழியில் போராடுகிறேன்` என்ற வசனங்கள் கூஸ்பம்ஸ் நிகழ்வாக தியேட்டரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் முதல் பாகம் எப்படி மாபெரும் வெற்றி பெற்றதோ இப்பாகமும் அதேப் போல வெற்றியடையும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
- இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஏராளமான ரசிகர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ஒரு சுவாரசிய நிகழ்வை நடத்தியுள்ளனர். கல்கி2898 ஏ.டி என்ற திரைப்படம் வெளியாகும் நாளில் தெலுங்கில் நடிகர் ராஜசேகர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது.
இதனால் ஏராளமான ரசிகர்கள் பிரபாசின் கல்கி 2898 ஏ.டி.க்கு பதிலாக ராஜசேகர் நடித்த கல்கி படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.
இதையடுத்து ராஜசேகர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த முன்பதிவுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். கல்கி 2898 ஏ.டி திரைப்பட குழுவினருக்கு பாராட்டும் அவரது வாழ்த்தையும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து `புக் மை ஷோ' நிறுவனம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளனர். யாரும் கவலைக் கொள்ள வேணாம், யாரெல்laaம் ராஜசேகரின் கல்கி திரைப்படத்திற்கு தவறுதலாக புக் செய்யப்பட்டதோ அவர்களக்கு பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படத்திற்கு பதிவு செய்யப்படும், இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்யப்படும் என அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை பார்ப்பதற்கு நாளுக்கு நாள் மக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நிறைய திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.
ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
படம் வெளியாகி வெற்றிகரமாக அதன் 2 ஆம் வாரத்தில் நுழைந்துள்ளது. இப்படம் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டு தெலுங்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரண்மனை 4 - க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்து 100 கோடி ரூபாயை இன்னும் சில வாரங்களில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி.
- தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி. படத்தின் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்பட பல படங்களில் நடித்தார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் பல படங்களில் நடித்து வரும் லட்சுமிமேனன் தனது முதல் காதல் பற்றி கூறியதாவது:-
யாரும் என்னை காதலிப்பதாக சொல்லவில்லை. ஆனால் நான் ஒருவரிடம் என் காதலை சொன்னேன். பள்ளியில் படிக்கும் போது எனக்கு பிடித்த ஒருவரிடம் காதலை சொன்னேன். சில நாட்கள் கழித்து என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.
குடும்பத்தினருக்கு தெரியாமல் இருப்பதற்காக போர்வைக்குள் இருந்து கொண்டு காதலரிடம் பேசுவேன். சினிமா வாய்ப்புகள் வந்ததால் பள்ளி படிப்பையும் தொடர முடியவில்லை. காதலையும் தொடர முடியவில்லை. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். தற்பொழுது ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சப்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
- காதல் என்பது ஒரு வார்த்தை. அது வார்த்தைகள் அல்ல வாழ்க்கை.
ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீப காலமாக ஒரு செய்தி பரவியது.
ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
அதைதொடர்ந்து இந்த விவாகரத்து வதந்திக்கு பதில கூறும் வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமீபத்தில் ஒரு பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
"ஜெயம்" படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிறது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த ஆர்த்தி, "காதல் என்பது ஒரு வார்த்தை. அது வார்த்தைகள் அல்ல வாழ்க்கை" என்ற தலைப்பைச் சேர்த்திருந்தார். இவர்களது உறவு குறித்த இந்த ஒரு பதிவை வெளியிட்டு விவாகரத்து குறித்த செய்தியை ஆர்த்தி சரிசெய்தார்.
இந்நிலையில் தற்போது ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார். இது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இஸ்டாகிராம் பயோவில் இருக்கும் கணவரின் ஐடியை அவர் நீக்கவில்லை. அதே போல் பெயருக்கு பின்னால் இருக்கும் ரவி என்ற பெயரையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நஸ்ரியா, நயன்தாரா, ஆர்யா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராஜா ராணி திரைப்படம் வெளியாகியது.
- இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது.
2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நஸ்ரியா, நயன்தாரா, ஆர்யா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராஜா ராணி திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் மூலம் அட்லி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார், இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது. காதலர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு மாபெரும் ரசிகர் பட்டாளமே இன்றும் இருக்கிறது.
நஸ்ரியா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தது அப்படத்தில் மட்டுமே. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர் ஆனால் அது இதுவரை நடக்கவே இல்லை.
ஆனால் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக நஸ்ரியா மற்றும் நயன்தாரா 10 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா, நஸ்ரியா மற்றும் ஃபஹத் பாசில் ஒன்றாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
அப்புகைப்படத்திற்கு 'இறுதியாக... இந்த நாளுக்காக' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவும் இப்படத்தை பகிர்ந்து யூ கய்ஸ் ஆர் தி ஸ்வீட்டஸ்ட், க்யூட்டஸ் அண்ட் பெஸ்ட் என்ற தலைப்பில் பதிவிட்டார்.
பல வருடங்களுக்கு பிறகு இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அப்புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.