என் மலர்
சினிமா
ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய ஆர்த்தி - நீடிக்கும் விவாகரத்து சர்ச்சை
- இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
- காதல் என்பது ஒரு வார்த்தை. அது வார்த்தைகள் அல்ல வாழ்க்கை.
ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீப காலமாக ஒரு செய்தி பரவியது.
ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
அதைதொடர்ந்து இந்த விவாகரத்து வதந்திக்கு பதில கூறும் வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமீபத்தில் ஒரு பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
"ஜெயம்" படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிறது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த ஆர்த்தி, "காதல் என்பது ஒரு வார்த்தை. அது வார்த்தைகள் அல்ல வாழ்க்கை" என்ற தலைப்பைச் சேர்த்திருந்தார். இவர்களது உறவு குறித்த இந்த ஒரு பதிவை வெளியிட்டு விவாகரத்து குறித்த செய்தியை ஆர்த்தி சரிசெய்தார்.
இந்நிலையில் தற்போது ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார். இது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இஸ்டாகிராம் பயோவில் இருக்கும் கணவரின் ஐடியை அவர் நீக்கவில்லை. அதே போல் பெயருக்கு பின்னால் இருக்கும் ரவி என்ற பெயரையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.